செய்திக்கொத்து

வாரயிறுதிக் கட்டுப்பாட்டுத் தளர்வுக்கு பிறகு அதிகமான கூட்டம்

ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள லக்கி பிளாசா, நார்த் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள பெனின்சுலா பிளாசா ஆகிய இரு கடைத் தொகுதிகளுக்குச் செல்வோருக்கான கட்டுப்பாட்டுத் தளர்வுகள் கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட பிறகு நேற்று முன்தினம் அவ்விரு கடைத்தொகுதிகளுக்கும் சென்றோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

பிலிப்பீன்ஸ், மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர் களுக்கு பிரபலமான ஒன்றுகூடும் இடங்களாக அமைந்து உள்ள அவ்விரு கடைத்தொகுதிகளுக்கும் சென்று நண்பர்கள், உறவினர்களைச் சந்திப்பது, உணவுண்ணுவது, சிகை திருத்தம் செய்வது போன்ற பல்வேறு நடவடிக்கை களில் வெளிநாட்டு ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இவ்விரு கடைத்தொகுதிகளில் வாரயிறுதிக் கட்டுப் பாடுகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி அறிவிக் கப்பட்டன. அது முதல் அவ்விரு இடங்களின் வர்த்தகம் பெரிதளவில் பாதிக்கப்பட்டதாக கடை உரிமையாளர்கள் கவலை தெரிவித்தனர்.

அதேவேளையில் நேற்று முன்தினம் அவ்விரு கடைத் தொகுதிகளிலும் வருகையாளர்களின் எண்ணிக்கை அதிக மாக இருந்ததால், கொவிட்-19 கிருமித்தொற்று அச்சமும் அங்கு நிலவியது. லக்கி பிளாசாவில் நேற்று முன்தினம் காலையில் வருகையாளர் வரம்பு 6,445ஐத் தொட்டதும் அந்தக் கடைத்தொகுதி சிறிது நேரம் புதிய வருகையாளர் களை அனுமதிக்கவில்லை.

பாதுகாப்பு இடைவெளித் தூதர்களும் பாதுகாப்பு நிர்வாக அமலாக்க அதிகாரிகளும் அங்கு கூடியிருந்தவர்கள் பாது காப்பு இடைவெளியைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்தனர். ஆயுதமேந்திய போலிசாரும் அங்கு காணப்பட்டனர்.

அவ்விரு கடைத்தொகுதி நடத்துநர்களும் பெரிய அளவிலான கூட்டத்தைக் கட்டுப்படுத்த கூடுதல் ஊழியர் களைப் பணியமர்த்தியதாக சிங்கப்பூர் பயணத் துறைக் கழகமும் எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தன.

நடை, சைக்கிளோட்டுதல்: 50 பேர் வரை கொண்ட குழுவுக்கு அனுமதி

நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், படகுவலித்தல் ஆகிய நடவடிக்கைகளில் நாளை புதன்கிழமை முதல் 50 பேர் வரை பங்கேற்கலாம். முன்னர் இத்தகைய நடவடிக்கைகளில் 20 பேர்தான் பங்கேற்க முடியும். எனினும், இந்நடவடிக்கைகளில் சமூகப் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். 50 பேர் எட்டு குழுக்களாகப் பிரிக்கப்பட வேண்டும். அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்ள அனுமதிக்கப்படாது என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தெரிவித்தது.

கொவிட்-19 கிருமித்தொற்றைக் கையாளுவதற்காக அமைக்கப்பட்டுள்ள அமைச்சுகள் நிலைப் பணிக்குழு சமூக நடவடிக்கைகளில் மேலும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து கடந்த மாதம் அறிவித்திருந்தது. சுற்றுலா ஏற்பாட் டாளர்கள் இனிமேல் ஒவ்வொரு சுற்றுலாவிற்கும் ஒப்புதல் பெறத் தேவையில்லை. ஒரே அனுமதியின்கீழ் சுற்றுலா நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கலாம் என்று கழகம் கூறியது.

சுற்றுலாக்களை மீண்டும் தொடங்க வர்த்தக தொழில் அமைச்சிடம் முன்னர் ஒப்புதல் பெற்ற சுற்றுலா ஏற்பாட்டாளர் களும் வழிகாட்டிகளும் மீண்டும் ஒப்புதல் பெற தேவை யில்லை. குறைந்தபட்சம் ஓர் இடத்துக்கான சுற்றுலாவை மீண்டும் தொடங்க அனுமதி பெற்றிருந்தால், வேறு இடங் களுக்கான சுற்றுலாவாக இருந்தாலும் மீண்டும் அனுமதி பெறத் தேவையில்லை.

சுற்றுலாக்களை மீண்டும் தொடங்குவதற்கான அமைச் சின் ஒப்புதலைப் பெற சுற்றுலா ஏற்பாட்டாளர்களும் வழிகாட்டிகளும் பயணத்துறைக் கழகம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் மதிப்பீடு செய்ய

14 நாட்கள் வரை ஆகும். சுற்றுலாக்களுக்கான கட்டுப் பாடுகள் தளர்த்தப்பட்டாலும், கிருமி தொற்றும் அபாயத்தைக் குறைப்பதற்கும், தொடர்புத் தடமறிதலை எளிதாக்குவதற்கு மான பாதுகாப்பான நடவடிக்கைகள் நடப்பில் இருக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!