தாமதமாக கட்டணம் செலுத்தும் குடும்பங்களுக்கான உதவித் திட்டம் வீட்டுக் கடன், வாடகை: கூடுதல் கட்டணம் ரத்து

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக (வீவக) வீட்­டுக் கடன் தவ­ணைக் கட்­ட­ணம், வாட­கைக் கட்­ட­ணங்­க­ளைச் செலுத்த முடி­யாத வீட்டு உரி­மை­யா­ளர்­கள், பொது­மக்­க­ளுக்கு, அந்­தக் கட்­ட­ணங்­க­ளைத் தாம­த­மா­கச் செலுத்­து­வ­தற்கு விதிக்­கப்­படும் கூடு­தல் கட்­ட­ணம் இன்­னும் ஆறு மாதங்­க­ளுக்கு அதா­வது இவ்­வாண்டு செப்­டம்­பர் மாதம் 30ஆம் தேதி வரை ரத்து செய்­யப்­ப­டு­கிறது.

இந்­தத் தக­வலை தேசிய வளர்ச்சி துணை அமைச்­சர் முகம்­மது ஃபைசால் இப்­ரா­கிம் நேற்று தமது ஃபேஸ்புக் பதி­வில் தெரி­வித்­தார்.

"பொரு­ளி­யல் மீண்­டு­வ­ரும் சூழ­லில் கொவிட்-19 தாக்­கம் கார­ண­மாக சில சிங்­கப்­பூர் குடும்­பங்­கள் தொடர்ந்து நிதிப் பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­கின்­றன," என்­றார் அவர்.

உதவி தேவைப்­படும் குடும்­பங்­க­ளைக் குறி­வைத்து உத­வும் அர­சாங்­கத்­தின் அணு­கு­மு­றை­இது என்­றும் அவர் தெரி­வித்­தார்.

ஏற்­கெ­னவே கடந்த ஆண்டு அக்­டோ­பர் முதல் இவ்­வாண்டு மார்ச் மாதம் வரை வீவக வீட்­டுக் கடன் தவ­ணைக் கட்­ட­ணம், வாட­கைக் கட்­ட­ணங்­க­ளைச் செலுத்த முடி­யா­த­வர்­க­ளுக்கு, அந்­தக் கட்­ட­ணங்­க­ளைத் தாம­த­மா­கச் செலுத்­து­வ­தற்கு விதிக்­கப்­படும் கூடு­தல் கட்­ட­ணங்­கள் ரத்து செய்­யப்­பட்­டி­ருந்­தன.

மாதக் கடை­சி­யில் எஞ்­சி­யி­ருக்­கும் தவ­ணைத் தொகை­யின் அடிப்­ப­டை­யில் தற்­போது ஆண்­டுக்கு 7.5% என்ற விகி­தத்­தில் இந்­தக் கூடு­தல் கட்­ட­ணம் விதிக்­கப்­ப­டு­கிறது.

கடந்த ஆண்டு ஏப்­ரல் மாதம் முதல் இவ்­வாண்டு மார்ச் மாதம் வரை 5,200க்கும் அதி­க­மான குடும்­பங்­கள் தங்­க­ளது வீட்­டுக் கடன் தவணை, வீட்டு வாடகை செலுத்த முடி­யா­த­தால் வீவக வழங்­கிய நிதி உத­வித் திட்­டங்

களைப் பயன்­ப­டுத்­தின.

கட்­ட­ணம் செலுத்­து­வ­தைத் தள்­ளி­வைப்­பது, குறைந்த கட்­ட­ணம் செலுத்­து­வது, கடன் தவ­ணைக் காலத்தை நீட்­டித்து மாதாந்­திர தவ­ணைக் கட்­ட­ணத்­தைக் குறைப்­பது போன்ற திட்­டங்­கள் அவை.

அதே கால­கட்­டத்­தில் கிட்­டத்­தட்ட 4,000 குடும்­பங்­க­ளுக்கு

வாட­கையை வீவக குறைத்­த­தா­க­வும் டாக்­டர் ஃபைசால் குறிப்­பிட்­டார்.

நிதிப் பிரச்­சி­னையை எதிர்­கொள்­ளும் வீட்டு உரி­மை­யா­ளர்­கள் மற்­றும் வாட­கை­தா­ரர்­கள் உத­விக்­காக அரு­கில் உள்ள வீவக கிளையை நாட ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

வங்­கி­களில் கடன் பெற்­றுள்ள வீட்டு உரி­மை­யா­ளர்­கள் சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் மற்­றும் நிதி நிறு­வ­னங்­கள் அறி­மு­கப்­ப­டுத்­திய விரி­வு­ப­டுத்­தப்­பட்ட ஆத­ர­வுத் திட்­டத்­தைப் பயன்­ப­டுத்­த­லாம்.

சொத்­துக் கட­னுக்கு டிசம்­பர் 31ஆம் தேதி வரை குறை­வான தவ­ணைக் கட்­ட­ணம் செலுத்த விரும்­பு­வோர் விண்­ணப்­பிக்­க­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!