கடல்துறை ஊழியர்களை அதிகரிக்கத் திட்டம்

கடல்துறை ஊழியர்களை அதிகரிக்கத் திட்டம்

2 mins read
654cd92f-e066-476a-9d05-35382a7e8de5
-

சூயஸ் கால்­வா­யில் கடந்த மாதம் கப்­பல் ஒன்று சிக்கிக்கொண்டு மற்ற கப்­பல்­கள் செல்­வ­தற்­கான பாதையை மறைத்­த­தை­ய­டுத்து தடைப்­பட்ட கப்­பல் போக்­கு­வ­ரத்து மீண்­டும் தொடங்­கி­யுள்­ள­தால், இங்கு வரும் கப்­பல்­களை வர­வேற்க ஆயத்­தப் பணி­களை சிங்­கப்­பூர் துறை­மு­கம் மேற்­கொண்டு வரு­கிறது.

அதி­க­ரிக்­கும் கப்­பல் போக்­கு­

வ­ரத்தை எதிர்­கொள்ள கூடு­த­லான ஊழி­யர்­கள் பணி­யில் அமர்த்­தப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் கப்­பல் நிறுத்­தப்­படும் இடங்­க­ளின் இருப்பு குறித்து கப்­பல் போக்­கு­வ­ரத்து நிறு­வ­னங்

­க­ளுக்கு விரை­வில் தெரி­விக்­கப்­படும் என­வும் சிங்­கப்­பூர் கடற்­றுறை மற்­றும் துறை­முக ஆணை­யத்­தின் தலைமை நிர்­வாகி குவா லே ஹூன் குறிப்­பிட்­டார்.

கப்­பல்­கள் சிங்­கப்­பூ­ருக்கு வந்­த­தும் அவற்­றைக் கையா­ளத் தேவை­யான கப்­பல் நிறுத்­து­மி­டங்­கள், உப­க­ர­ணங்­கள், மனி­த­வ­ளம் போன்­ற­வற்­றின் தொடர்­பில் இயன்­ற­வரை சிறப்­பா­கச் செயல்­பட்டு வரு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார். ஐரோப்பா, மத்­திய கிழக்கு, ஆசியா ஆகிய கண்­டங்­களை சூயஸ் கால்­வாய் வழி­யாக இணைக்­கும் மைய­மாக இருக்­கிறது சிங்­கப்­பூர்.

வரும் 19 முதல் 23ஆம் தேதி வரை சிங்­கப்­பூர் கடல்துறை வாரம் அனு­ச­ரிக்­கப்­பட இருப்­பதை அடுத்து, கொரோனா தொற்­றுச் சூழ­லுக்­குப் பிற­கான தொழில்

துறைப் பிரச்­சி­னை­கள் குறித்து முக்­கி­ய­மான தலை­வர்­கள் உரை­யாற்­று­வர் என்று திரு­வாட்டி குவா குறிப்­பிட்­டார்.

அனைத்­து­லக கடல்துறை அமைப்­பின் பொதுச்­செ­ய­லா­ளர் கிட்­டாக் லிம், உலக வங்­கி­யின் பரு­வ­நிலை மாற்­றத்­துக்­கான அனைத்­து­லக இயக்­கு­நர் பெர்­னிஸ் வான் புரோங்க்­ஹார்ஸ்ட், கார்­கில் ஓஷன் டிரான்ஸ்­போர்ட் நிறு­வ­னத்­தின் தலை­வர் ஜான் டைலெ­மான் ஆகி­யோர் நிகழ்ச்சிகளில் உரை­யாற்­று­வர். 6,000க்கும் அதி­க­மா­னோர் நிகழ்ச்­சி­களில் பங்­கேற்­பர்.

கொரோனா தொற்­றுக் காலத்­தில் கடல்துறை ஊழி­யர்­களில் 30 விழுக்­காட்­டி­னர் நாட்­டி­லி­ருந்து வெளியேறிய நிலை­யில், இங்­கி­ருக்­கும் உள்­ளூர், வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளைக் கொண்டு நிறு­வ­னங்­கள் செயல்­பா­டு­களை முடுக்­கி­விட்­டுள்­ளன. ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்க வேண்­டிய தேவை நில­வு­வ­தா­க­க் கூறப்­பட்­டது.

கொரோனா தொற்­றுப் பர­வல் தடுப்பு, தடுப்­பூசி போடு­வது தொடர்­பான செல­வு­கள் உட்­பட நடை

முறைச் செல­வு­கள் அதி­க­ரித்­தி­ருப்­பது மற்­றொரு பிரச்­சி­னை­. இத்துறையின் முன்­கள ஊழி­யர்­களில் 99 விழுக்­காட்­டி­ன­ருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.