இக்கட்டான சூழலில் உதவிய எம்ஆர்டி நிலைய அதிகாரிகள்

இக்கட்டான சூழலில் உதவிய எம்ஆர்டி நிலைய அதிகாரிகள்

1 mins read
8890bade-8ae9-447e-8745-437109f88d19
தெம்பனிஸ் எம்ஆர்டி நிலைய மேலாளர் ஆலன் லிம், நிலையத்தின் மூத்த துணை மேலாளரான திரு ஜஹபர் சஹிபப்பா ஆகியோர் திருவாட்டி சிட்டியின் இல்லத்துக்குச் சென்று குழந்தையைப் பார்த்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தெம்­ப­னிஸ் எம்­ஆர்டி நிலை­யத்­தில் கடந்த மாதம் 13ஆம் தேதி தம்­

மு­டைய 63 வயது தாயா­ரு­டன் ரயி­லுக்­கா­கக் காத்­துக்­கொண்­டி­ருந்­தார் 27 வய­தான திரு­வாட்டி சிட்டி ரொஹா­னிஸா முஹம்­மது.

திடீ­ரென கால்­க­ளின் வழியே ரத்­தம் வழிந்­தோ­டி­ய­தைக் கண்­ட­தும் பிரச்­சி­னை­யைப் புரிந்­து­கொண்ட அவ­ருக்கு, தம் கரு­வி­லி­ருந்த குழந்­தை­யைப் பற்­றிய கவலை மேலோங்­கி­யது.

கர்ப்­பி­ணி­யான திரு­வாட்டி சிட்­டிக்கு ரத்தசோகை, கருக்­கொடி பிரச்­சினை இருந்­தது முந்­தைய கர்ப்­பத்­தின்­போ­தும் இருந்­தது. உடனே ரயில்­நி­லைய அதிகாரி­

க­ளின் உத­வியை நாடி­னார் திரு­வாட்டி சிட்­டி­யின் தாயார் ரோஸ்னா இதாம்.

அவ­சர சிகிச்சை வாக­னத்தை வர­வ­ழைத்து திரு­வாட்டி சிட்­டியை பத்­தி­ர­மாக மருத்­து­வ­ம­னைக்கு அனுப்­பி­வைத்­த­னர் நிலைய அதி­கா­ரி­கள். அது­வரை திரு­வாட்டி சிட்­டி­யை­யும் அவ­ரது தாயா­ரை­யும் பதற்­ற­மின்றி பார்த்­துக்­கொள்­ள­வும் அதி­கா­ரி­கள் உத­வி­னார்­கள்.

குறை­மா­தப் பிர­ச­வம் என்­ப­தால் குழந்தை சற்று சிறி­ய­வ­னாக இருந்­தா­லும் சுறு­சு­றுப்­பாக இருக்­கி­றான் என்று, குழந்­தை­யை­யும் திரு­வாட்டி சிட்­டி­யை­யும் பார்க்க கடந்த 8ஆம் தேதி வீட்­டுக்­குச் சென்ற சென்ற அதி­கா­ரி­க­ளி­டம் திரு­வாட்டி ரோஸ்னா கூறினார்.

இது­போல சிக்­க­லான சூழல்­களை எதிர்­கொள்ள அதி­கா­ரி­க­ளுக்­குப் பயிற்சி அளிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கக் கூறி­னார் தெம்­ப­னிஸ் எம்­ஆர்டி நிலைய மேலா­ளர் ஆலன் லிம்.