பள்ளி தொடர்பான கட்டணங்கள், மளிகைப்பொருள்கள் வாங்குவதற்காக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த குறைந்த வருமானக் குடும்பங்களுக்காக மொத்தம் $20,000 ரொக்கம், உணவுப் பொருள்கள் அடங்கிய 100 கூடைகள் ஆகியவற்றை மெண்டாக்கி அமைப்பிடம் என்டியுசி ஃபேர்பிரைஸ் நிறுவனத்தின் அறக்
கொடைப் பிரிவு வழங்கியுள்ளது.
இன்று முதல் அடுத்த மாதம் 12ஆம் தேதி வரை தனது 60 கடைகளில் முஸ்லிம்கள் நோன்பு துறப்பதற்காக உணவுப் பண்டங்களையும் வழங்க இருக்கிறது. கடந்த ஆண்டில் 58 கடைகளில் இந்தச் சேவை நடப்பில் இருந்தது. நோன்பு துறப்பதற்கு 30 நிமிடங்கள் முன்பும், பிறகும் அந்தப் பொருள்கள் தனித்தனி பொட்டலங்களாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், அங்கு விற்கப்படும் ஹலால் சான்றுடைய பொருள்
களின் எண்ணிக்கையையும் கிட்டத்தட்ட $1,500 வரை அதிகரித்துள்ளது ஃபேர்பிரைஸ்.
ஏற்கெனவே ஹலால் சான்றுடைய 5,700 பொருள்கள்
ஃபேர்பிரைஸ் கடைகளில் விற்கப்படுகின்றன.
உட்லண்ட்ஸ் சிவிக் சென்டரில் உள்ள ஃபேர்பிரைஸ் கடைக்குச் சென்றிருந்த தற்காப்பு, மனிதவள மூத்த துணை அமைச்சரும் மெண்டாக்கி அமைப்பின் துணைத் தலைவருமான திரு ஸாக்கி முகம்மது, ஃபேர்பிரைஸ் நிறுவனம் வழங்கிய நன்கொடைக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இதனையும் சேர்த்து ஃபேர் பிரைஸ் நிறுவனத்தின் அறக்
கொடைப் பிரிவு மெண்டாக்கி அமைப்புக்கு கடந்த 7 ஆண்டுகளில் $360,000 நன்கொடை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நன்மை செய்யும் காலமாக ரமலான் மாதம் இருப்பதையொட்டி உதவி தேவைப்படுவோருக்கு உதவுவதில் மகிழ்ச்சி என்றார்
ஃபேர்பிரைஸ் குழும தலைமை நிர்வாகி சியா கியன் பெங்.

