ரமலான் நோன்பு காலத்தில் குறைந்த வருமான குடும்பங்களுக்கு உதவும் என்டியுசி ஃபேர்பிரைஸ்

ரமலான் நோன்பு காலத்தில் குறைந்த வருமான குடும்பங்களுக்கு உதவும் என்டியுசி ஃபேர்பிரைஸ்

2 mins read
b70f9f4a-a048-4989-9dd3-bced92892638
-

பள்ளி தொடர்­பான கட்­ட­ணங்­கள், மளி­கைப்­பொ­ருள்­கள் வாங்­கு­வ­தற்­காக முஸ்­லிம் சமூ­கத்­தைச் சேர்ந்த குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­க­ளுக்­காக மொத்­தம் $20,000 ரொக்­கம், உண­வுப் பொருள்­கள் அடங்­கிய 100 கூடை­கள் ஆகி­ய­வற்றை மெண்­டாக்கி அமைப்­பி­டம் என்டியுசி ஃபேர்பி­ரைஸ் நிறு­வ­னத்­தின் அறக்­

கொ­டைப் பிரிவு வழங்­கி­யுள்­ளது.

இன்று முதல் அடுத்த மாதம் 12ஆம் தேதி வரை தனது 60 கடை­களில் முஸ்­லிம்­கள் நோன்பு துறப்­ப­தற்­காக உண­வுப் பண்­டங்­க­ளை­யும் வழங்க இருக்­கிறது. கடந்த ஆண்­டில் 58 கடை­களில் இந்­தச் சேவை நடப்­பில் இருந்­தது. நோன்பு துறப்­ப­தற்கு 30 நிமி­டங்­கள் முன்­பும், பிற­கும் அந்­தப் பொருள்­கள் தனித்­தனி பொட்­ட­லங்­க­ளாக வழங்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

மேலும், அங்கு விற்­கப்­படும் ஹலால் சான்­று­டைய பொருள்­

க­ளின் எண்­ணிக்­கை­யை­யும் கிட்­டத்­தட்ட $1,500 வரை அதி­க­ரித்­துள்­ளது ஃபேர்பி­ரைஸ்.

ஏற்­கெ­னவே ஹலால் சான்­று­டைய 5,700 பொருள்­கள்

ஃபேர்பி­ரைஸ் கடை­களில் விற்­கப்­ப­டு­கின்­றன.

உட்­லண்ட்ஸ் சிவிக் சென்­ட­ரில் உள்ள ஃபேர்பி­ரைஸ் கடைக்­குச் சென்­றி­ருந்த தற்­காப்பு, மனி­த­வள மூத்த துணை அமைச்­ச­ரும் மெண்­டாக்கி அமைப்­பின் துணைத் தலை­வ­ரு­மான திரு ஸாக்கி முகம்­மது, ஃபேர்பி­ரைஸ் நிறு­வ­னம் வழங்­கிய நன்­கொ­டைக்கு நன்றி தெரி­வித்­துக்­கொண்­டார்.

இத­னை­யும் சேர்த்து ஃபேர் பிரைஸ் நிறு­வ­னத்­தின் அறக்­

கொ­டைப் பிரிவு மெண்­டாக்கி அமைப்­புக்கு கடந்த 7 ஆண்­டு­களில் $360,000 நன்­கொடை வழங்­கி­யி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

நன்மை செய்­யும் கால­மாக ரம­லான் மாதம் இருப்­ப­தை­யொட்டி உதவி தேவைப்­ப­டு­வோ­ருக்கு உத­வு­வ­தில் மகிழ்ச்சி என்றார்

ஃபேர்பி­ரைஸ் குழும தலைமை நிர்­வாகி சியா கியன் பெங்.