வாகனப் பயிற்சிப் பள்ளியில் தானியங்கி மதிப்பீடு: சோதனைமுறையை ஏற்று நடத்த அழைப்பு

வாகனப் பயிற்சிப் பள்ளியில் தானியங்கி மதிப்பீடு: சோதனைமுறையை ஏற்று நடத்த அழைப்பு

2 mins read
5994f7ea-3e1c-46ae-87dd-a8a111294bf3
-

இன்­னும் சில ஆண்­டு­களில் மோட்­டார் சைக்­கிள், கார் ஆகி­ய­வற்றை ஓட்ட கற்­றுக்­கொள்­ப­வர்­கள் தானி­யங்கி முறை­யால் மதிப்­பீடு செய்­யப்­ப­டக்­கூ­டும்.

அதில் தேர்ச்சி பெறு­ப­வர்­கள் வாகன ஓட்­டு­நர் உரி­மத்­தைப் பெறு­வர்.

அதற்கு முன்பு தானியங்கி முறைக்கான சோத­னை­முறை நடத்­தப்­ப­டு­கிறது. சோத­னை­முறை வெற்­றி­க­ர­மாக அமைந்­தால் இத்­திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும்.

மோட்­டார் சைக்­கிள் ஓட்ட கற்­றுக்­கொள்­ப­வர்­களை மதிப்­பீடு செய்­யும் முழுமையான தானி­யங்கி முறையை ஏற்று நடத்­தும் நிறு

­வ­னத்­தைத் தேர்வு செய்ய ஏலக்­குத்­த­கைக்கு உள்­துறை அமைச்சு அழைப்பு விடுத்­துள்­ளது.

தற்­போது அதி­கா­ரி­க­ளால் மதிப்­பீடு செய்­யப்­பட்ட பிறகே வாகன ஓட்­டு­நர் உரி­மம் வழங்­கப்­ப­டு­கிறது. இந்த முறை கூடிய விரை­வில் மாறக்­கூ­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மோட்­டார் சைக்­கி­ளுக்­கான 2, 2A, 2B ஆகிய பிரி­வு­களை முழுமையான தானி­யங்கி முறை­யைக் கொண்டு மதிப்­பீடு செய்ய சோத­னை­முறை நடத்­தப்­படும் என்று ஏலக்­குத்­தகை ஆவ­ணங்­கள் தெரி­வித்­துள்­ளன.

முழுமையான தானி­யங்கி மதிப்­பீட்டு முறை­யில் உணர்­க­ரு­வி­களும் கேம­ராக்­களும் பயன்­ப­டுத்­தப்­படும். புதிய மதிப்­பீட்டு முறையை நடத்த தேர்வு செய்­யப்­படும் நிறு­வ­னம், உட்­லண்ட்ஸ் தொழிற் பூங்­கா­வில் உள்ள எஸ்­எஸ் டிசி வாக­னம் ஓட்­டும் பள்­ளி­யில் முழுமையான தானி­யங்கி மதிப்­பீட்டு முறையை பொருத்த வேண்­டும். மோட்­டார் சைக்­கிள் மதிப்­பீட்டு முறை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள தவ­று­கள் அனைத்­தை­யம் துல்­லி­ய­மாகக் கண்­டு­பி­டிக்க முடிந்­தால் மட்­டுமே மதிப்­பீடு செய்­யப்­படும் தானி­யங்கி முறை முழு­மை­யாக நடை­மு­றைப்ப­டுத்­தப்­படும்.

தேர்வு செய்­யப்­படும் தானி­யங்கி மதிப்­பீட்டு முறை குற்­றப் புள்­ளி­கள் வழங்­கப்­பட்­ட­தற்­கான கார­ணத்தை தெரி­விக்­கக்­கூ­டி­ய­தாக இருக்க வேண்­டும்.

அது­மட்­டு­மல்­லாது மொத்த குற்­றப் புள்­ளி­க­ளைக் கணக்­கி­டக்­கூ­டி­ய­தா­க­வும் இருக்க வேண்­டும்.

இந்த தானி­யங்கி மதிப்­பீட்டு முறை குறித்து சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் முதன்­மு­த­லில் 2017ஆம் ஆண்­டில் அறி­வித்­தார். இதற்­கான சோத­னை­முறை இவ்­வாண்டு நடை­பெ­றும் என்­றும் புதிய மதிப்­பீட்டு முறை 2023ஆம் ஆண்­டுக்­குள் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்றும் அவர் தெரி­வித்­தார்.

வாக­னங்­கள் ஓட்ட கற்­றுக்­

கொ­டுக்­கும் வகுப்­பு­களை நடத்­த­வும் மதிப்­பீடு செய்­ய­வும் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­தும்­போது அது வகுப்­பின் தரத்தை உயர்த்­து­கிறது என்று அமைச்­சர் சண்­மு­கம் தெரி­வித்­தார். சோத­னை­முறை பற்றி கேட்­கப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு உள்­துறை அமைச்சு பதிலளிக்­க­வில்லை. அது­கு­றித்து எஸ்­எஸ்­டி­சி­யைச் சேர்ந்த மேலா­ள­ரும் கருத்து தெரி­விக்க மறுத்­து­விட்­டார்.