முன்னாள் திருச்சபை சேவகர் முறையற்ற வகையில் நடந்துகொண்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாக சிங்கப்பூர் கத்தோலிக்க பேராயம் உறுதி செய்துள்ளது.
அவருக்குக்கீழ் செயல்பட்ட இளைய சேவகர்களுடன் அவர் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாக அறியப்படுகிறது.
இந்த இளையர்கள் 11 வயதிலிருந்து 16 வயதுக்கு உட்பட்டவர்கள். குற்றச்சாட்டை எதிர்நோக்கும் திருச்சபை சேவகர் கடந்த ஆண்டு பதவி விலகியதாக தெரிவிக்கப்பட்டது.
அவருக்கு ஆலோசனை சேவையை தேவாலயம் வழங்கி வருவதாக சிங்கப்பூர் ரோமன் கத்தோலிக்க பேராயத்தின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த இரண்டு வாரங்களில் ஏறத்தாழ 10 திருச்சபை சேவகர்கள் பதவி விலகியுள்ளனர்.
குற்றச்சாட்டை எதிர்நோக்கும் சேவகருக்கு எதிராக போதுமான நடவடிக்கை எடுக்கப்படாததாலும் போலிசில் புகார் செய்யப்படாததாலும் திருச்சபை சேவகர்கள் பலர் பதவி விலகியுள்ளதாக பதவி விலகியவர்களில் ஒருவர் தெரிவித்தார்.

