புது கிருமிகளை சமாளிக்கவும் ஆயத்த முயற்சிகள் தீவிரம்

இதர சோதனைகளையும் நடத்தும் ஆற்றலுடன் கொவிட்-19 தேசிய பரிசோதனைக் கூடம்

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொற்றை ஒடுக்க இடம்­பெ­றும் தடுப்­பூசி இயக்­கம் திட்­ட­மிட்­டப்­படி நன்கு முன்­னேற்­றம் கண்டு, விரும்­பிய பலன் ஏற்­பட்டு வரு­கிறது.

இந்­நி­லை­யில், வருங்­கா­லத்­தில் ஏற்­ப­டக்­கூ­டிய தொற்றுநோயைத் தவிர்த்­துக்­கொள்­ளும் முயற்­சி­களை­யும் சிங்­கப்­பூர் தொடர்ந்து மும்­மு­ர­மாக்கி வரு­கிறது.

எடுத்­துக்­காட்­டாக, கொவிட்-19 பரி­சோ­த­னை­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தப்­பட்டு வரும் 'ஸ்ட்­ராங்­ஹோல்ட் டயக்­னா­சிஸ் லேப்' என்ற சோதனைக்­கூ­டத்தை எதிர்­கா­லத்­தில் இதர பரி­சோ­த­னை­க­ளுக்­கும் பயன்­ப­டுத்­த­லாம் என்று பேரா­சிரியர் பேட்­ரிக் டான் கூறினார்.

இவர், அந்­தப் பரி­சோ­த­னைக் கூடத்­தின் செயல்­திட்ட இயக்­கு­நரா­வார். இவர், அறி­வி­யல் தொழில்­நுட்ப ஆய்வு முக­வையின் (ஏ*ஸ்டார்) சிங்­கப்­பூர் மர­ப­ணுப் பயி­ல­கம் என்ற அமைப்­பின் நிர்­வாக இயக்­கு­ந­ரு­மா­வார்.

அந்­தச் சோத­னைக்­கூ­டம் 2020 நடுப்­ப­குதி முதல் செயல்­பட்டு வரு­கிறது. அங்கு கொவிட்-19 பிசி­ஆர் பரி­சோ­த­னையை நடத்த முடி­யும்.

துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட், போன விஸ்­தா­வில் இருக்கும் சிங்­கப்­பூ­ரின் உயி­ரி­யல் மருத்துவ மையத்­தில் (பயோபொலிஸ்) அமைந்­துள்ள அந்­தப் பரி­சோ­தை­னைக் கூடத்தை திங்­கட்­கி­ழமை பார்­வை­யிட்­டார்.

திரு ஹெங், அது­பற்றி நேற்று ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­வேற்­றி­னார். இந்த முக­வை­யின் ஆய்­வா­ளர்­கள், அறி­வி­யல் வல்­லு­நர்­களை­யும் சிங்­கப்­பூ­ரின் இதர அறி­வி­யல் வல்­லு­நர்களையும் திரு ஹெங் பெரி­தும் பாராட்­டி­னார்.

கொவிட்-19க்கு எதி­ரான போராட்­டத்­தில் இவர்­கள் வெளியே தெரி­யாத கதா­நா­ய­கர்­கள் என்று துணைப் பிர­த­மர் பாராட்­டி­னார்.

தேசிய ஆய்வு அற­நி­று­வ­னக் கழ­கம் என்ற அமைப்­பின் தலை­வ­ரா­க­வும் இருக்­கும் திரு ஹெங், சிங்­கப்­பூ­ரின் ஆய்­வுத் துறை­யா­ளர்­கள் மற்றும் தனி­யார் துறை­யி­னரு­டன் சேர்ந்து செயல்­பட்டு கொரோ னாவுக்கு எதி­ரான தீர்­வு­களை ஏ*ஸ்டார் முக­வை­யைச் சேர்ந்த வல்­லு­நர்­கள் உரு­வாக்கி இருக்­கிறார்­கள் என்­று குறிப்பிட்டார்.

கொரோனா தொற்­றைத் சமா­ளிப்­ப­தில் இந்த வலு­வான உறவு சிங்­கப்­பூ­ருக்கு உயிர்­நா­டி­யா­ன­தாக இருந்து வந்­துள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

இங்கு கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூசி இயக்­கம் நன்கு முன்­னேற்­றம் கண்டு வரு­கிறது என்­றா­லும் கொரோனாவுக்கு எதி­ரான பரி­சோ­த­னை­கள், தொற்­றுக்கு எதி­ரான போராட்ட உத்­தி­யில் இன்­ன­மும் மிக முக்­கி­ய­மான ஒரு தூணாக திகழ்­கின்­றன.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ரை­யும் ஏற்­கெனவே கொவிட்-19 தொற்­றி­யோ­ரை­யும்­கூட மீண்­டும் இந்­தக் கிருமி தொற்­றி­வி­டக்­கூ­டிய ஆபத்து இருப்­ப­தா­கத் தெரிய வந்­துள்­ளதே இதற்­கான கார­ணம்.

சிங்­கப்­பூர், நாள் ஒன்­றுக்கு ஏறத்­தாழ 40,000 கொவிட்-19 பரி­சோதனை­களை நடத்­து­வது இலக்கு என்று சென்ற ஆண்­டில் அறி­வித்­தது. கடந்த வாரம் நாள் ஒன்­றுக்கு ஏறத்­தாழ 34,800 பரி­சோ­த­னை­கள் நடத்­தப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்­சின் இணை­யத் தளம் மூலம் தெரிய வரு­கிறது.

மக்­க­ளுக்குத் தடுப்­பூசி போடப்­பட்டுவரும் ­போ­தி­லும் கொரோனா பரி­சோ­த­னை­களளைத் தொடர வேண்­டிய தேவை இருந்­து­வ­ரும் என்று பேரா­சி­ரி­யர் டான் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!