தனியார் வீடுகள் மறுவிற்பனை பத்தாண்டுகளில் இல்லாத உச்சம்

தனியார் வீடுகள் மறுவிற்பனை பத்தாண்டுகளில் இல்லாத உச்சம்

1 mins read
7241865d-b328-4fd8-8419-246a901dee0b
-

கடந்த 2011 மே மாதத்திற்குப் பிறகு இவ்வாண்டு மார்ச் மாதத்தில் ஆக அதிக எண்ணிக்கையில் கொண்டோமினிய வீடுகள் மறுவிற்பனை ஆகின. அதேபோல, தொடர்ந்து எட்டாவது மாதமாக மறுவிற்பனை விலைகளும் அதிகரித்தன.

இவ்வாண்டு பிப்ரவரியில் 1,289 கொண்டோமினிய வீடுகள் மறுவிற்பனை செய்யப்பட்ட நிலையில், அதற்கடுத்த மார்ச் மாதத்தில் அந்த எண்ணிக்கை 28.9% கூடி, 1,662 ஆனது.

இதன்மூலம் தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக 1,000 தனியார் வீடுகளுக்குமேல் கைமாறியுள்ளன.

சென்ற ஆண்டு மார்ச் மாதத்தை ஒப்புநோக்க, இவ்வாண்டின் அதே மாதத்தில் தனியார் வீடுகள் மறுவிற்பனை 122.5% அதிகரித்தது.

இவ்வாண்டின் பிப்ரவரியை ஒப்புநோக்க 0.1 விழுக்காடும் கடந்த ஆண்டின் மார்ச்சை ஒப்புநோக்க 4.2 விழுக்காடும் இவ்வாண்டு மார்ச்சில் தனியார் மறுவிற்பனை வீட்டு விலைகள் கூடின.