புதிய நிறுவனத்தின் மூலம் நூறு வேலைகள்

ஐரோப்­பிய பன்­னாட்டு நிறு­வ­ன­மான 'ஸ்னை­டர் எலக்ட்­ரிக்'கும் பொரு­ளி­யல் மேம்­பாட்­டுக் கழ­க­மும் இணைந்து சிங்­கப்­பூ­ரைத் தலை­மை­ய­க­மா­கக் கொண்ட 'நேவி­எக்ஸ் சொல்­யூ­ஷன்ஸ்' எனும் நிறு­வ­னத்­தைத் தொடங்கி இருக்­கின்­றன.

அந்­நி­று­வ­னத்­தின்­மூ­லம் நூறு புதிய வேலை­கள் உரு­வாக்­கப்­ப­ட­லாம். வாடிக்­கை­யா­ளர் சேவை, தொழில்­நுட்ப ஆத­ரவு, நிதி, மனித­வ­ளம், தள­வா­டம் ஆகிய பிரிவு­களில் அவ்­வே­லை­கள் உரு­வாக்­கப்­படும் என்று நேவி­எக்ஸ் சொல்­யூ­ஷன்ஸ் நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாகி சைமன் கிளே­ரிங்­போல்ட் தெரி­வித்­தார்.

மின்­னாக்­கி­கள், இடை­நிலை மின்­ன­ழுத்த 'சுவிட்ச் கியர்'கள் போன்ற சொத்­து­களை நிர்­வ­கிப்­பதி­லும் பயன்­ப­டுத்­து­வ­தி­லும் நிறு­வனங்­க­ளுக்கு நேவி­எக்ஸ் சொல்­யூ­ஷன்ஸ் உத­வும்.

காலாங்­கில் ஸ்னை­டர் எலக்ட்­ரிக் நிறு­வ­னத்­தின் தலை­மை­ய­கத்­திற்­குத் துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் நேற்று வருகை மேற்­கொண்­டார். அப்­போது அந்­நி­று­வ­னத்­தின் புத்­தாக்க முயற்சி­களில் சில அவ­ருக்­குக் காட்­டப்­பட்­டன.

மின்­னி­லக்­கப் பொரு­ளி­ய­லில் இப்­போது மின்­னாற்­றல், குளிர்­விப்புச் சொத்­து­கள் ஆகி­யவை வர்த்­த­கக் கட்­ட­மைப்­பில் முக்­கிய இடம்­பெ­று­வ­தால் அத்­து­றை­யின் முக்­கிய சவால்­க­ளுக்­குத் நேவி­எக்ஸ் சொல்­யூ­ஷன்ஸ் நிறு­வ­னம் தீர்­வு­கா­ணும் என்று திரு கிளே­ரிங்­போல்ட் தெரி­வித்­தார்.

"சந்தை மாற்ற வேகத்­திற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் நிறு­வ­னங்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தும் நீடித்து நிலைக்­கும் வகை­யில் மாறு­வ­தற்­கான தேவை­யைச் சமன்­செய்­வ­தும் எங்­க­ளது பொறுப்­பும் உந்­து­சக்­தி­யும் ஆகும்," என்­றும் அவர் சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!