20 ஆண்டுகள் சட்டவிரோதமாக வசிக்கும் ‘அடையாளம் தெரியாதவரால்’ நீதிமன்றம் குழப்பம்

'அடை­யா­ளம் தெரி­யா­த­வர்' என்று நீதி­மன்ற ஆவ­ணங்­களில் தெரி­விக்­கப்­பட்ட ஒரு­வர் குறித்து நீதி­மன்­றம் குழப்­பத்­தில் உள்­ள­தா­கத் தெரி­வித்­துள்­ளது.

இந்த ஆண்டு தொடக்­கத்­தில் மகேஷ் பத்­ம­நா­பன் என்ற பெய­ரில் குற்­றம் சாட்­டப்­பட்ட அந்த ஆட­வ­ருக்கு 67 வயது என்று நம்­பப்­ப­டு­கிறது. அவர் இலங்­கை­யில் இருந்து வந்­த­வர்.

குடி­நு­ழைவு குற்­றத்தை எதிர்­நோக்­கும் அந்த ஆட­வர் சிங்­கப்­பூ­ரில் 20 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக சட்­ட­வி­ரோ­த­மா­கத் தங்கி வரு­கி­றார் என கூறப்­பட்­டது.

ஆனால் மகேஷ் பத்­ம­நா­பன் என்ற பெய­ரில் அவர் வைத்­தி­ருக்­கும் கடப்­பி­தழ் செல்­லு­ப­டி­யா­கா­தது என்று குடி­நு­ழைவு சோத­னைச் சாவடி அதி­காரி கூறி­னார்.

அவர் வெவ்­வேறு பெயர்­களில் பல பத்­தி­ரங்­களை வைத்­தி­ருப்­ப­தால் அவ­ரது உண்­மை­யான அடை­யா­ளத்­தைக் கண்­ட­றி­வது சிர­ம­மாக உள்­ள­தாக அரசுத் தரப்பு தெரி­வித்­தது.

எனவே, 'அடை­யா­ளம் தெரி­யா­த­வர்' (அன்­னோன்) என்ற பெய­ரில் குற்­றச்­சாட்­டைத் தாக்­கல் செய்து வழக்கை நடத்த அரசு தரப்பு கோரி­யது.

ஆனால் இது குறித்து நீதி­பதி ஆடம் நக்­கோடா கவலை தெரி­வித்­தார்.

'அடை­யா­ளம் தெரி­யா­த­வர்' என்று குறிப்­பி­டப்­பட்ட ஒரு­வர் மீது எவ்­வாறு குற்­றம் சாட்­டு­வது என்று நீதி­பதி கேள்வி எழுப்­பி­னார்.

"எனக்கு இது புரி­ய­வில்லை. 'அடை­யா­ளம் தெரி­யா­த­வர்' என்று குறிப்­பி­டப்­பட்ட ஒரு­வர் மீது குற்­றம் சுமத்த நான் எப்­படி அனு­மதிக்க முடி­யும்," என்று கேள்வி எழுப்­பி­னார்.

மீண்­டும் மகேஷ் பத்­ம­நா­பன் என்ற பெய­ரி­லேயே குற்­றம் சுமத்தி வழக்­கைப் பதி­யு­மா­றும் இந்த விவ­கா­ரம் குறித்து தலை­மைச் சட்ட அதி­காரி அலு­வ­ல­கத்­தில் விளக்­கம் பெறு­மா­றும் அரசுத் தரப்­பி­டம் கூறப்­பட்­டது.

மொழி பெயர்ப்­பா­ளர் குற்­றச்­சாட்டை அந்த ஆட­வ­ரி­டம் தமி­ழில் வாசித்­துக்­காட்­டி­னார். அவ­ரது அடை­யா­ளம் உறு­தி­செய்­யப்­ப­ட­வில்லை என்று மொழி­பெ­யர்ப்­பா­ளர் நீதி­மன்­றத்­தி­டம் கூறி­னார்.

பிப்­ர­வரி 6ஆம் தேதி முதல் விசா­ர­ணைக் காவ­லில் உள்ள அந்த ஆட­வர், காணொளி மூலம் நடந்த விசா­ர­ணை­யில் நீண்ட நரைத்த முடி­யு­டன் காணப்­பட்­டார். அவ­ருக்கு $20,000 பிணை வழங்­கப்­பட்­டுள்­ளது. விசா­ர­ணை­யின்­போது அவர் பேச­வில்லை. அவ்­வப்­போது தலையை மட்­டும் ஆட்­டி­னார்.

அவர் மீது மேலும் அதிக குற்­றங்­க­ளைச் சுமத்த எண்­ணி­யி­ருப்­ப­தா­க­வும் ஆனால் முத­லில் அவர் யார் என்­ப­தைக் கண்­ட­றிய வேண்­டும் என்­றும் அரசுத் தரப்­பில் வழக்கை நடத்­தும் அதி­காரி கூறி­னார்.

வழக்கு ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது. ஏப்­ரல் 20ஆம் தேதி மீண்­டும் அவர் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­வார்.

சட்­ட­வி­ரோ­த­மா­கத் தங்கி இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டால் அவ­ருக்கு ஆறு மாதங்­கள் வரை சிறைத் தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம். மேலும் $6,000 வரை அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம். அவ­ருக்கு 50 வய­துக்கு மேல் ஆகி­விட்­ட­தால் பிரம்­படி கொடுக்­கப்­படாது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!