'மேரி-டைம் ஹவுஸ்' கட்-ட-டம் மறுமேம்பாடு

'மேரி-டைம் ஹவுஸ்' கட்-ட-டம் மறுமேம்பாடு

1 mins read
1f3c70ab-1478-4dd8-834f-f367e4bbb683
-

சிங்­கப்­பூர் வழி­யா­கச் செல்­லும் மாலுமிகளுக்கான பிரத்­தி­யேக ஹோட்­ட­லாக அறி­யப்­படும் தஞ்­சோங் பகா­ரில் உள்ள 'மேரி­டைம் ஹவுஸ்' கட்­ட­டம் 2024ஆம் ஆண்­டின் பிற்­ப­கு­தி­யில் இடிக்­கப்­பட்டு மறு­மேம்­பாடு காண­வுள்­ளது. மார்ச் மாத இறு­தி­யில் சிங்­கப்­பூர் கடல்­துறை துறை­முக ஆணை­யம் (எம்­பிஏ) வெளி­யிட்ட ஏலக்­குத்­தகை ஆவ­ணம் இத­னைத் தெரி­விக்­கிறது. ஏப்­ரல் 23 அன்று நிறை­வ­டை­யும் ஏலக்­குத்­த­கை­யின்­படி, மறு­மேம்­பாட்­டிற்­கான கட்­டு­மா­னச் செலவு $30 மில்­லி­ய­னாக மதிப்­பி­டப்படுகிறது. மறு­சீ­ர­மைக்­கப்­பட்ட பின்­னர் இக்­கட்­டம், தொடர்ந்து மாலுமிகளுக்கும் தங்­கு­மிட வச­தி­களை வழங்­கும், அதே நேரத்­தில் அனைத்­து­ல­கப் பயிற்சி, ஆராய்ச்சி, கருத்­த­ரங்­கு­க­ளுக்­கான ஒரே இட­மா­க­வும் செயல்­படும்.

கட்­ட­டத்­தின் பொது­வான தேய்­மா­னங்­களும் காலப்­போக்­கில் அதி­க­ரித்து வந்­துள்ள பரா­ம­ரிப்­புச் செல­வு­களும் கட்­ட­டம் மறு­சீ­ர­மைக்­கப்­ப­டு­வ­தற்­கும் முன்­னோட்ட வடி­வ­மைக்கு ஆலோ­ச­கரை ஈடு­ப­டுத்­து­வ­தற்­குமான கார­ணங்­கள் என்று எம்­பிஏ தெரி­வித்­தது.