தேசிய பூங்காக் கழக அதிகாரி மீது லஞ்சக் குற்றச்சாட்டுகள்

தேசிய பூங்காக் கழக அதிகாரி மீது லஞ்சக் குற்றச்சாட்டுகள்

2 mins read
bd292e4a-79c8-4d3f-ae2f-d7b7d41f6e0d
-

தேசிய பூங்காக் கழக அதி­காரி லீ சூன் பிங் என்­ப­வர் மீது லஞ்சம், மோச­டிக் குற்­றச்­சாட்­டு­கள் நேற்று சுமத்­தப்­பட்­டன. மேலும் பல பெண்­க­ளின் பாவா­டைக்­குள் புகைப்­ப­டங்­களை எடுத்­த­தா­க­வும் அவர் மீது குற்­றம் சாட்டப்­பட்­டுள்­ளது.

ஒன்­பது மான­பங்­கக் குற்­றச்­சாட்டு­களும் ஒரு மோச­டிக் குற்­றச்­சாட்­டும் ஓர் ஊழல் குற்­றச்­சாட்­டும் 48 வய­தான லீ மீது சுமத்­தப்­பட்­டன.

சிங்­கப்­பூ­ரில் தோட்­டக் கலை கலா­சா­ரத்தை ஊக்­கு­விக்­கும் தேசிய பூங்காக் கழ­கத்­தைச் சேர்ந்த 'கம்­யூ­னிட்டி இன் புளூம்' எனும் அமைப்­பின் மேலா­ள­ராக லீ இருந்­தார்.

கடந்த ஆண்டு பிப்­ர­வ­ரி­யில், பூங்காக் கழ­கத்­திற்கு 10,000 தொப்­பி­களை வழங்க வேண்­டிய ஒரு விற்­ப­னை­யா­ள­ரி­ட­மி­ருந்து லீ $10,000 லஞ்­சம் பெற முயன்­ற­தா­கக் கூறப்­ப­டு­கிறது. ஆனால் அந்த விற்­ப­னை­யா­ளர் 5,000 தொப்­பி­களை மட்­டுமே வழங்­கி­யுள்­ளார்.

தாம­த­மாக விநி­யோ­கம் செய்­த­தற்­கான கட்­ட­ணத்தை விதிக்­கா­மல் முழு ஒப்­பந்­தத் தொகை­யான $23,300ஐ விற்­ப­னை­யா­ள­ருக்கு பூங்காக் கழ­கம் செலுத்­தி­ய­தா­கக் கூறப்­பட்­டது. இதில், கழ­கத்­தின் கணக்கு நிர்­வா­கியை லீ ஏமாற்­றி­ய­தாக குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்­ளது.

மற்ற குற்­றச்­சாட்­டு­களில், லீ தனது தொலை­பே­சி­யைப் பயன்­படுத்தி 2015ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடை­யில் பல பெண்­க­ளின் பாவா­டைக்­குள் புகைப்­ப­டங்­கள் எடுத்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் பூங்­காக்­களில் பயன்­ப­டுத்­தப்­படும் தாவ­ரங்­களை வழங்­கும் தோட்­டத்­தில் வேலை செய்­ப­வர்­களும், ரயில்­களி­லும் அரு­கி­லுள்ள பள்­ளி­யி­லும் இருக்­கும் பெண்­களும் அடங்­கு­வர்.

ஊழல் மற்­றும் பிற குற்­றங்­களை சிங்­கப்­பூர் கடு­மை­யாக எதிர்­கொள்­ளும் என்று ஊழல் ஒழிப்பு விசா­ர­ணைப் பிரிவு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் கூறி­யது.

லீ $20,000 பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார். மே 25ஆம் தேதி அவர் மீண்­டும் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­வார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஊழல் குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால், லீக்கு ஏழு ஆண்­டு­கள் வரை சிறை அல்­லது $100,000 வரை அபரா­தம் அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.

மோச­டிக் குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால், 10 ஆண்­டு­கள் வரை சிறை, அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­லாம்.

பாவா­டைக்­குள் புகைப்­ப­டம் எடுத்த ஒவ்­வொரு குற்­றச்­சாட்­டுக்­கும் ஓராண்டு வரை சிறை அல்லது அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­லாம் அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.