13 வயதுச் சிறுவனை மானபங்கம் செய்த டாக்சி ஓட்டுநருக்கு சிறை
உயர்நிலை 1ல் பயன்ற மாணவரை மானபங்கம் செய்த குற்றத் திற்காக கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனத்தில் பகுதிநேரமாக டாக்சி ஓட்டும் 58 வயது சியூ லீ பெங் என்ற ஆடவருக்கு 13 மாதம் 3 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 வயதாக இருந்த அந்தச் சிறுவனும் அவனது நண்பனும் பள்ளி முடிந்து பகல் 1.12 மணிக்கு சியூவின் டாக்சியை எடுத்தனர். சியூ அந்தச் சிறுவனை முன்னிருக்கையில் அமரச் சொன்னார். நண்பன் பின்னிருக்கையில் அமர்ந்தான். வீடு வந்ததும் சிறுவன் கட்டணப் பணத்தைக் கையில் எடுத்தபோது, சிறுவன் உதவிகேட்காதபோதும், அவனது இருக்கைவாரை சியூவே கழற்றினார். அப்போதுதான் சியூ அச்சிறுவனை இருமுறை மானபங்கம் செய்ததாகக் கூறப்பட்டது.
சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: ஆடவருக்கு 18 ஆண்டு சிறை, பிரம்படி
இரு சிறுவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்த வேலை இல்லாத ஆடவருக்கு 18 ஆண்டுகள் சிறை, 24 பிரம்படிகள் நேற்று விதிக்கப்பட்டது. வீடில்லாதிருந்த அந்த இரண்டு இளம் சகோதரர்களையும் அவர்களது தாயையும் தமது வீட்டில் இரு மாதங்கள் அந்த ஆடவரும் அவரது மனைவியும் தங்க வைத்திருந்தபோது இக்குற்றத்தைப் புரிந்துள்ளார்.
சிறுவர்களின் ஞானத்தந்தையான ஆடவர், கடந்த ஆண்டு அக்டோபர், டிசம்பர் மாதங்களுக்கு இடையில் 12 வயதாக இருந்த மூத்த சகோதரனுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த இரு குற்றச்சாட்டுகளை கடந்த மாதம் ஒப்புக்கொண் டார். தீர்ப்பின் போது, மூத்த சகோதரனை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது, இளையவனை மானபங்கம் செய்தது, பேருந்து ஓட்டுநருக்கு காயம் ஏற்படுத்தியது ஆகிய மூன்று குற்றச்சாட்டு களும் கவனத்தில் கொள்ளப்பட்டன.
பாதுகாப்பும் வசிக்கத் தகுந்த சூழலும் அளிக்கக்கூடிய இல்லத்தை பாதிக்கப்பட்டவருக்கு வழங்குவதற்குப் பதிலாக, அவருடன் இருந்த பழக்கத்தையும் பொறுப்பையும் ஆடவர் பயன்படுத்திக்கொண்டுள்ளார் என்று உயர்நீதிமன்ற நீதிபதி மாவிஸ் சியோன் கூறினார்.

