சுகாதார அமைச்சின் தரவு நிர்வாகப் பிரிவின் துணைத் தலைவர் மீது குற்றச்சாட்டு

சுகாதார அமைச்சின் தரவு நிர்வாகப் பிரிவின் துணைத் தலைவராக முன்பு இருந்த ஸாவோ ஸெங் எனும் 36 வயது மாது, சிங்கப்பூரில் தினசரி கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை 22 முறை கசியவிட்டதாக இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

ரகசியத் தகவல்களைக் கசியவிட்டதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கைது செய்யப்பட்ட அவர் மீது அலுவலக ரகசியங்கள் சட்டத்தின்கீழ் (OSA) 24 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

கொவிட்-19 நோயாளி ஒருவரின் நிலை குறித்து ஸாவோவிடம் விவரம் கேட்டு தவறான தொடர்புகொண்டமைக்காக ஸாவோவின் தோழியான 36 வயது டாங் லின் மீதும் இன்று குற்றம் சுமத்தப்பட்டது. அலுவலக ரகசியங்கள் சட்டத்தின்கீழ் ஸாவோ 10 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

தினசரி கொவிட்-19 பாதிப்பு விவரம் குறித்து சுகாதார அமைச்சு அறிவிக்கும் முன்பாகவே அந்தத் தகவல் கசிந்திருப்பதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி பொதுமக்களிடமிருந்து போலிசுக்கு புகார் கிடைத்ததாக நேற்று வெளியான அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் அத்தகைய ரகசிய தகவல்களைப் பெற அனுமதியற்ற உரையாடல் குழுவில் அந்தத் தகவலகளை ஸாவோ 22 முறை பகிர்ந்துகொண்டதாக விசாரணையில் தெரியவந்தது.

அந்தத் தகவல்களைப் பெற்ற அல்லது மற்றவர்களுக்கு அனுப்பிய 64 பேருக்கு அலுவலக ரகசியங்கள் சட்டத்தின்கீழ் கடும் எச்சரிக்கை அல்லது எழுத்துபூர்வ ஆலோசனைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சட்டத்தின்கீழ் தவறான தொடர்புகொள்ளும் குற்றம் புரிவோருக்கு $2,000 வரை அபராதம், ஈராண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

அந்தத் தகவல்களைப் பெறும் அனுமதியில்லாதவர்கள் அத்தகைய ரகசியத் தகவல்களைப் பெற்றிருந்தால் அவற்றை மற்றவர்களுக்கு அனுப்பாமல் உடனே அழித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அவர்களும் அலுவலக ரகசியங்கள் சட்டத்தின்கீழ் குற்றம்சாட்டப்படுவர்.

ஸாவோ, டாங் ஆகிய இருவருக்கும் முறையே $10,000, $5,000 மதிப்பில் பிணை வழங்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!