சமூகத்தில் ஒருவர் உட்பட புதிதாக 27 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாகச் சுகாதார அமைச்சு இன்று பிற்பகல் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
எஞ்சிய 26 பேரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். அவர்கள் சிங்கப்பூர் வந்திறங்கியதும் இல்லத் தனிமை உத்தரவின்கீழ் தனிமைப்படுத்தப்பட்டனர்.
வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் எவரும் பாதிக்கப்படவில்லை.
முன்னதாக, கொரோனா தொற்றியுள்ளதாக நேற்று உறுதிசெய்யப்பட்ட 14 பேரில் நால்வர் மாணவர் விசாவில் இருப்பவர்கள். அந்த 14 பேரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.
சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் இதுவரை 30 பேரும் தொற்று கண்டிருந்தபோது வேறு காரணங்களால் 15 பேரும் மரணமடைந்துவிட்டனர்.

