உலகிலேயே சக்திவாய்ந்த கடப்பிதழ் பட்டியலில் மீண்டும் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது சிங்கப்பூர். முதல் நிலையில் ஜப்பான் இடம்பெற்றுள்ளது.
'விசா' இல்லாமல் ஜப்பானிய கடப்பிதழ் வைத்திருப்போர், 193 நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளலாம். அதே 'விசா' இல்லாமல் சிங்கப்பூர் கடப்பிதழ் வைத்திருப்பவர்கள் 192 நாடுகளுக்குச் செல்லலாம் என்று கூறப்பட்டது. 2019ஆம் ஆண்டில் முதல் இடத்தை ஜப்பானும் சிங்கப்பூரும் பிடித்தன. அதையடுத்து, சவூதி அரேபியாவுக்குச் செல்வது தொடர்பில் ஜப்பான் வசதி ஏற்படுத்திக்கொண்டதால் சிங்கப்பூரை சென்ற ஆண்டு முந்தியது.
பட்டியலின் மூன்றாவது இடத்தில் தென்கொரியாவும் ஜெர்மனியும் உள்ளன.

