தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உடற்குறையுள்ளோருக்கு மேம்பட்ட வேலைவாய்ப்பு, வாழ்க்கைச்சூழல்

2 mins read
58dc72e9-d5c9-4e5c-8a49-5f3a23b64411
-

வேலை­வாய்ப்­பு­கள் கிடைப்­ப­தி­லும் வச­தி­யாக நட­மா­டு­வ­தி­லும் உடற்­குறை உள்­ள­வர்­க­ளுக்­குக் குறிப்­பி­டத்­தக்க கூடு­தல் உதவி கிடைக்­க­வுள்­ளது. தடங்­க­ல் இல் ­லாமல் நட­மா­டு­வது, மின்­னி­லக்­க­மயத்­தில் இணைவது, வேலை ஆத­ர­வுச் சேவை­க­ளைக் குடி­யிருப்பு வட்­டா­ரங்­க­ளுக்­குக் கொண்­டு­வ­ரு­வது, சிறப்­புத் தேவை பள்­ளி­களில் மென் திறன்­கள் பாடத்­திட்­டத்தை வலு­வாக்­கு­வது போன்ற விவ­கா­ரங்­கள் குறித்து இரண்டு பணிக்­கு­ழுக்­கள் முன்­வைத்த 21 பரிந்­து­ரை­களை அடிப்­படை­யா­கக் கொண்டு உத­வித் திட்­டங்­கள் உரு­வாகி வரு­கின்­றன.

உடற்­கு­றை­பாடு உள்ள 300 பேர், அவர்­க­ளின் குடும்­பத்­தார் மற்­றும் பரா­ம­ரிப்­பா­ளர்­கள், உடற்­குறை தொடர்­பில் இயங்கி வரும் சமூ­கச் சேவை அமைப்­பு­கள் ஆகிய தரப்­பு­க­ளி­ட­மி­ருந்து ஈராண்டு காலம் திரட்­டப்­பட்ட கருத்­து­க­ளைக் கொண்டு பரிந்­து­ரை­கள் அமைந்­துள்­ள­தா­கக் கூறப்­பட்­டது.

இப்­ப­ரிந்­து­ரை­களை அர­சாங்­க­மும் ஏற்­றுக்­கொண்­டுள்­ள­தாக சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு நேற்று அறி­வித்­தது.

அமைச்­சு­களும் அமைப்­பு­களும் சென்ற ஆண்டு முதல் ஒரு சில பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­படுத்தி வரு­வ­தா­க­வும் இவ்­வாண்டு இரண்­டாம் பாதி­யி­லி­ருந்து மேலும் பல பரிந்­து­ரை­கள் படிப்­ப­டி­யாக அம­லாக்­கம் காணும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

உடற்­கு­றை­யுள்­ளோரை மேலும் உள்­ள­டக்­கிய ஒரு சமு­தா­யத்தை உரு­வாக்­கும் மூன்­றா­வது துணை­பு­ரி­யும் பெருந்­திட்­டத்­தின் ஓர் அங்­க­மாக இரண்டு பணிக்­கு­ழுக்­களும் 2019ஆம் ஆண்­டில் அமைக்­கப்­பட்­டன.

வேலை­வாய்ப்பு தொடர்­பில் அமைக்­கப்­பட்ட பணிக்­குழு, எதிர்­கால பொரு­ளி­ய­லுக்கு உடற்­கு­றை­யுள்­ளோ­ரைத் தயார்­ப்ப­டுத்­து­வ­தில் கவ­னம் செலுத்­தி­யது. பிற­ரைச் சார்ந்­தி­ருக்­காத வாழ்க்­கைச்­சூ­ழல் தொடர்­பில் அமைக்­கப்­பட்ட பணிக்­குழு, தொழில்­நுட்­பம் மற்­றும் வடி­வமைப்பு வழி உடற்­கு­றை­யுள்­ளோர் சார்­பற்ற நிலை­யில் வாழ்­வதை ஊக்­கு­விப்­ப­தில் கவ­னம் செலுத்­தி­யது.

இரண்டு பணிக்­கு­ழுக்­க­ளுக்­கும் தலை­வ­ராக உள்ள சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி, "உடற்­கு­றை­யி­ருந்­தா­லும் நம்­மைப் போல் பணி­யாற்­றும் வாய்ப்பை உரு­வாக்­கித் தர நாங்­கள் இத்­தனை ஆண்­டு­க­ளாக முயற்சி செய்து வரு­கி­றோம். தொழி­லா­ளர் அணி­யில் மேலும் பல உடற்­கு­றை­யுள்­ளோர் சேர்க்­கப்­பட வேண்­டும் என்­பது எங்­க­ளின் விருப்­பம். இதற்­காக அவர்­க­ளுக்­குத் தேவைப்­படும் ஆத­ரவை வழங்­கு­வோம் அல்­லது முத­லா­ளி­கள் கேட்­டுக்­கொள்­ளும் பயிற்­சியை நாங்­கள் அளிப்­போம்," என்­றார்.

கல்வி அமைச்சு மறு­ஆய்வு

சிறப்­புக் கல்­விப் பள்­ளி­க­ளின் தொழில் பயிற்சி பாடத்­திட்­டத்தை கல்வி அமைச்சு மறு­ஆய்வு செய்­ய­வுள்ள நிலை­யில், வேலைக்­குத் தேவை­யான மென்­தி­றன்­களை வளர்ப்­பது வலி­யு­றுத்­தப்­படும். இத­னால் வேலைச் சூழ­லுக்­குச் சிறப்­புக் கல்­வித் தேவை­க­ளு­டைய மாண­வர்­களை மேலும் சிறப்­பா­கத் தயார் செய்ய முடி­யும் என்­பது வேலை­வாய்ப்பு பணிக்­கு­ழு­வின் இலக்­கு­களில் ஒன்­றா­கும்.

நட­மாட்­டம் தொடர்­பி­லான

குறைபாடுகளைக் கண்­ட­றி­தல்

'சிபிடி' என்ற மத்­திய வர்த்­தக வட்­டா­ரத்­தில் நட­மாட்­டம் தொடர்­பி­லான குறைபாடுகள், வீட­மைப்பு பேட்­டை­களில் நடமாடுவதில் உள்ள குறைபாடுகள் ஆகிய இரு அம்­சங்­க­ளை­யும் ஆராய, இரண்டு சமூக பங்­கா­ளிக் குழுக்­கள் விரை­வில் அமைக்­கப்­படும்.

கட்­ட­டச் சூழ­லில் உடற்­கு­றை­யுள்­ளோ­ரின் நட­மாட்­டத்தை மேம்­ப­டுத்­து­வது, எளி­தில் தக­வல்­களும் சேவை­களும் அவர்­க­ளுக்­குக் கிடைப்­பது போன்­ற­வற்­றில் கவ­னம் செலுத்­தப்­படும் என்று கூறப்­பட்­டது.