சுகாதார காப்புறுதி விவகாரங்களை ஆராய 12 பேர் கொண்ட குழு

சுகா­தா­ரம் தொடர்­பான காப்­பு­றுதி விவ­கா­ரங்­க­ளைக் கையாள, புதிய குழு ஒன்றை சுகா­தார அமைச்சு நிய­மித்­துள்­ளது.

வரும் 27ஆம் தேதி முதல் அதன் பணி­க­ளைத் தொடங்­க­வுள்ள இக்­குழு, சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு காப்­பு­றுதி அமைப்­பின் அதி­க­ரிக்­கும் செல­வு­களை மேலும் சிறப்­பாக நிர்­வ­கிப்­பது குறித்­துப் பரிந்­துரை செய்­யும்.

மேலும், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு காப்­பு­றுதி தொடர்­பான கோரிக்­கை­க­ளால் ஏற்­படும் புகார்­கள், சச்­ச­ர­வு­கள் ஆகி­ய­வற்றை ஆரா­யும் தளங்­களை அமைப்­ப­தி­லும் இக்­குழு வழி­காட்­டும் என்று கூறப்­பட்­டது.

சிங்­கப்­பூர் மருத்­து­வக் கழ­கம், சிங்­கப்­பூர் பய­னீட்­டா­ளர் சங்­கம், கட்­டண அள­வீட்டு ஆலோ­ச­னைக் குழு, வாழ்­நாள் காப்­பு­று­திச் சங்­கம், சிங்­கப்­பூர் மருத்­து­வச் சங்­கம், தனி­யார் மருத்­து­வ­ம­னை­கள் ஆகி­ய­வற்­றின் பிர­தி­நி­தி­கள் புதி­தாக அமைக்­கப்­பட்­டுள்ள இந்த 'பல­த­ரப்பு சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு காப்­பு­று­திக் குழு'வில் இடம்­பெ­று­வர் என்று கூறப்­பட்­டது.

சுகா­தார அமைச்சு கொள்­கைத் துறை­யின் துணைச் செய­லா­ளர் ஙியாம் சியூ யிங், மருத்­து­வச் சேவைப் பிரி­வின் துணை இயக்­கு­நர் டாக்­டர் டேஃப்னி கூ ஆகி­யோர் இக்­கு­ழு­வின் தலைமை பொறுப்பை ஏற்­றுள்­ள­னர்.

காப்­பு­றுதி நிறு­வ­னங்­களில் மருத்­து­வர் குழு இடம்­பெ­று­வது தொடர்­பில் அண்­மை­யில் சிங்­கப்­பூர் மருத்­து­வச் சங்­கத்­திற்­கும் வாழ்­நாள் காப்­பு­றுதி சங்­கத்­திற்­கும் இடையே மோதல் ஏற்­பட்­டது.

'ஒருங்­கி­ணைந்த காப்­பு­று­தித் திட்­டம்' தொடர்­பில் காப்­பு­றுதி நிறு­வ­னங்­கள் மீது தனி­யார் பிரிவு மருத்­து­வர்­கள் தங்­க­ளின் அதி­ருப்­தி­யைத் தெரி­வித்­தி­ருந்­த­னர். காப்­பு­று­தி­தா­ரர்­க­ளுக்­கான மருத்­து­வர் குழு­வில் தங்­க­ளின் மருத்­துவ நிபு­ணர்­கள் பலர் இடம்­பெ­ற­வில்லை என்­றும் ஒரு சாராரை விலக்கி வைக்­கும் வகை­யில் காப்­பு­றுதி நிறு­வ­னங்­க­ளின் மருத்­து­வக் குழுக்­கள் உள்­ளன என்­றும் அவர்­கள் புகார் கூறி­னர்.

மருத்­து­வர்­கள் குழு­வில் இடம்­பெற எவ்­வாறு தேர்­வா­கின்­ற­னர் என்­பது குறித்­தும் வெளிப்­ப­டைத்­தன்மை வேண்­டும் என்று சிங்­கப்­பூர் மருத்­து­வச் சங்­கம் கூறி­யுள்­ளது.

இந்த மோதலை அடுத்து, சுகா­தார அமைச்சு இத்­த­கைய விவ­கா­ரங்­க­ளைக் கையாள ஒரு குழுவை நிய­மிக்­கும் என்று சுகா­தார மூத்த துணை அமைச்­சர் கோ போ கூன் முன்­னர் கூறி­யி­ருந்­தார்.

சிங்­கப்­பூ­ரின் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு காப்­பு­றுதி அமைப்பை மேம்­ப­டுத்­தும் வகை­யில் இனி புதி­தாக அமைக்­கப்­பட்­டுள்ள குழுவே அமைச்சு, மருத்­து­வர்­கள், காப்­பு­றுதி நிறு­வ­னங்­கள், மருத்­து­வ­ம­னை­கள் ஆகிய தரப்­பு­க­ளின் ஒருங்­கி­ணைந்த செயல்­பாட்டு அடிப்­ப­டைத் தளம் என்று சுகா­தார அமைச்சு நேற்று வெளி­யிட்ட அதன் அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!