கூட்டுரிமை, வீவக வீட்டு வாடகை தொடர்ந்து அதிகரிப்பு

கூட்­டு­ரிமை மற்­றும் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீட்டு வாட­கை­மார்ச் மாதத்தில் தொடர்ந்து அதி­கரித்தது.

வாட­கைக்கு விடப்­படும் வீடு­களின் எண்­ணிக்கை உயர்ந்­து­வரும் கால­கட்­டத்­தில், இந்த அதி­க­ரிப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக சொத்­துச் சந்தை நிறு­வ­ன­மான 'எஸ்­ஆர்­எக்ஸ்' அதன் இணை­யத்­த­ளத்­தில் நேற்று தரவு வெளி­யிட்­டது.

சென்ற மாதம் வாட­கைக்கு விடப்­பட்ட கூட்­டு­ரிமை வீடு­க­ளின் எண்­ணிக்கை எட்டு மாதங்­களில் ஆக அதி­கம் என்று கூறப்­ப­டு­கிறது.

பிப்­ர­வ­ரி­யில் வாட­கைக்கு விடப்­பட்ட 3,865 கூட்­டு­ரிமை வீடு­க­ளை­விட மார்ச் மாதம் 32.4% அதி­க­மாக, அதா­வது மொத்­தம் 5,118 வீடு­கள் வாட­கைக்கு விடப்­பட்­டன.

அதே­போல் வாட­கைக்கு விடப்­பட்ட வீவக வீடு­க­ளின் எண்­ணிக்­கை­யும் ஒன்­பது மாதங்­களில் காணாத அள­வில் உயர்ந்­தி­ருந்­தது. பிப்­ர­வரி மாதத்­தில் 1,404 வீவக வீடு­கள் வாட­கைக்கு விடப்­பட்­டன.

மார்ச் மாதத்­தில் 41.2% அதி­க­மாக, அதா­வது மொத்­தம் 1,983 வீடு­கள் வாட­கைக்கு விடப்­பட்­டன.

இருப்­பி­னும், அண்­மை­யில் பதி­வா­கி­யுள்ள வீவக வாடகை வீடு­களின் எண்­ணிக்கை, மார்ச் மாதத்­திற்­கான ஐந்­தாண்டு சரா­சரி எண்­ணிக்­கை­யைக் காட்­டி­லும் 12.5% குறை­வா­கவே உள்­ள­து.

இந்­நி­லை­யில், கூட்­டு­ரிமை வீடு­க­ளுக்­கான வாடகை பிப்­ர­வரி மாதத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் மார்ச்­சில் 0.8% அதி­க­ரித்­தது. வீவக வீடு­க­ளின் வாடகை அதே கால­கட்­டத்­தில் 0.5% அதி­க­ரித்­தது.

கூட்­டு­ரிமை வீட்டு வாட­கை­கள் மூன்­றா­வது மாத­மாக ஏறு­மு­க­மாக உள்­ளது.

அத்­து­டன் சென்ற ஆண்டு மார்ச் மாதத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் 2.4% அதி­க­ரித்­துள்­ளது. இருப்­பினும் 2013ஆம் ஆண்டு ஜன­வ­ரி­யில் இருந்த உச்­சத்­தைக் காட்­டி­லும் 13.2% குறைவே.

வீவக வாட­கை­கள் தொடர்ந்து ஒன்­ப­தா­வது மாத­மாக உயர்ந்­துள்­ளன. சென்ற ஆண்டு மார்ச் மாதத்­தைக் காட்­டி­லும் 3.4% அதி­க­மா­க­வும் உள்­ளது. ஆனால் 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருந்த உச்­சத்­தைக் காட்­டி­லும் 11.2% குறைந்தே உள்­ளது.

கட்­டு­மான வேலை­களில் தாம­தம் ஏற்­பட்­டுள்­ள­தால் முடி­வ­டை­யாத நிலை­யில் வீடு­கள் இருப்­ப­தா­க­வும் இத­னால் பலர் வாட­கைக்கு விடப்­படும் கூட்­டு­ரிமை, வீவக வீடு­களை நாடு­வ­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!