சுவிஸ் வங்கியின் சிங்கப்பூர் கிளைக்கு $1 மி. அபராதம்

சுவிஸ் வங்கியின் சிங்கப்பூர் கிளைக்கு $1 மி. அபராதம்

1 mins read
a46d9e47-2f5e-4972-ad53-4b845ecccc07
-

பண­மோ­சடி, பயங்­க­ர­வா­தச் செயல்­க­ளுக்கு நிதி அளித்­தல் ஆகி­ய­வற்­றின் தொடர்­பில் போது­மான பாது­காப்பு அம்­சங்­க­ளைக் கடைப்­பி­டிக்­காத வங்கி ஒன்­றுக்கு $1 மில்­லி­யன் அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

சுவிட்­சர்­லாந்­தின் தனி­யார் வங்­கி­யான 'பேங்க் ஜே. சாஃப்ரா சர­சின்' (பிஜே­எஸ்) கீழ் இயங்கி வரும் சிங்­கப்­பூர் கிளைக்கு, மார்ச் 2014க்கும் செப்­டம்­பர் 2018க்கும் இடைப்­பட்ட காலத்­தில் நடந்த விதி­மீ­றல்­க­ளுக்­காக இந்த அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

சரி­யான, நியா­ய­மான வழி­களில் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் நிதிக்­கான மூலத்­தைக் கண்­ட­றி­யத் தவ­றி­யது உட்­பட வங்­கிக் கிளை­யில் பல்­வேறு விதி­மீ­றல்­கள் நடந்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.

பிஜே­எஸ் தானே உறு­திப்­ப­டுத்­தா­மல் பல­முறை வாடிக்­கை­யா­ளர்­கள் அளித்த உத்­த­ர­வா­தத்தை நம்­பி­யி­ருந்­த­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

வழக்­கத்­திற்கு மாறான பெரு­ம­ள­வி­லான அல்­லது அசா­தா­ரண வாடிக்­கை­யா­ளர் பரி­வர்த்­த­னை­கள் குறித்து ஆரா­யத் தவ­றி­ய­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

வாடிக்­கை­யா­ளர்­க­ளு­டன் ஒப்­பந்­தம் செய்­து­கொள்­ளும்­போ­தும் அவர்­க­ளின் வர்த்­தக உற­வு­க­ளைக் கண்­கா­ணிக்­கும்­போ­தும் இந்த விதி­மீ­றல்­கள் நேர்ந்­த­தாக சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது. சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஒரு வழித்­த­ட­மாக பயன்­ப­டக்­கூ­டிய அபா­யத்­திற்கு பிஜே­எஸ் தன்னை உட்­ப­டுத்­திக்­கொண்­ட­தா­கக் கூறப்­பட்­டது.