பொருளியல் 0.2% வளர்ச்சி

பொருளியல் 0.2% வளர்ச்சி

3 mins read
31d9dd57-e8ed-494a-9914-e43b2dcef2fe
-

2021 இரண்டாம் காலாண்டிலும் சிங்கப்பூர் பொருளியல் ஏற்றம் காணும் என எதிர்பார்ப்பு

இவ்­வாண்­டின் முதல் காலாண்­டில் சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் எதிர்­பார்க்­கப்­ப­டாத வகை­யில் 0.2% வளர்ச்சி கண்­டுள்­ள­தாக முன்­னோடி மதிப்­பீ­டு­கள் தெரி­விக்­கின்­றன.

உற்­பத்­தித் துறை­யில் காணப்­பட்ட ஏற்­ற­மும் சேவைத் துறை­கள் மீளத் தொடங்­கி­யுள்­ள­தும் இதற்கு முக்­கி­யக் கார­ணம் எனக் கூறப்­படு­கிறது.

அடுத்த காலாண்­டி­லும் பொரு­ளி­யல் வளர்ச்சி தொட­ரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இருப்­பி­னும், தொழி­லா­ளர் சந்­தை­யில் தொட­ரும் மந்­த­நி­லை­யாலும் அனைத்­து­ல­கப் பய­ணக் கட்­டுப்­பா­டு­க­ளா­லும் இவ்­வாண்­டின் பிற்­பா­தி­யில் பொரு­ளி­யல் வளர்ச்சி வேகம் குறை­ய­லாம் என்று பகுப்­பாய்­வா­ளர்­கள் பலரும் நம்­பு­கின்­றனர்.

2019 இறு­திக் காலாண்­டிற்­குப் பிறகு, காலாண்டு அடிப்­ப­டை­யில் பொரு­ளி­யல் வளர்ச்சி கண்­டி­ருப்­பது இதுவே முதன்­முறை. சென்ற ஆண்­டின் முதல் காலாண்­டில் பொரு­ளி­ய­லில் ஏற்­ற­இ­றக்­கம் காணப்­ப­ட­வில்லை.

முன்­ன­தாக, புளூம்­பெர்க் கருத்­தாய்­வின்­படி 2021 முதல் காலாண்­டில் பொரு­ளி­யல் 0.5% சுருங்­க­லாம் என பகுப்­பாய்­வா­ளர்­கள் கணித்­தி­ருந்­த­னர்.

நடப்­பாண்­டில் பொரு­ளி­யல் வளர்ச்சி 4% முதல் 6 விழுக்­காட்­டிற்­குள் இருக்­கும் என வர்த்­தக, தொழில் அமைச்சு தனது மொத்த உள்­நாட்டு உற்­பத்தி (ஜிடிபி) அறிக்­கை­யில் குறிப்­பிட்­டி­ருந்த நிலை­யில், இப்­போது அது­கு­றித்து எது­வும் தெரி­விக்­க­வில்லை.

ஆயி­னும், இவ்­வாண்­டில் நாட்­டின் 'ஜிடிபி' வளர்ச்சி 6 விழுக்­காட்­டிற்­கும் அதி­க­மாக இருக்­க­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் தனது அரை­யாண்டு மறு­ஆய்­வில் குறிப்­பிட்­டுள்­ளது.

இத­னி­டையே, நாண­யக் கொள்­கை­யில் எந்த மாற்­ற­மும் செய்­யாத நாணய ஆணை­யம், மதிப்­பீட்டு விகி­தத்தை 0% என அதே நிலை­யி­லேயே வைத்­துள்­ளது.

காலாண்டு அடிப்­ப­டை­யில் பார்க்­கை­யில், வர்த்­தக, தொழில் அமைச்சு மதிப்­பீ­டு­க­ளின்­படி, 2020 இறு­திக் காலாண்­டைக் காட்­டி­லும் 2021 முதல் காலாண்­டில் பொரு­ளி­யல் 2% வளர்ச்சி அடைந்­துள்­ளது. முந்­திய காலாண்­டில் இந்த வளர்ச்சி 3.8 விழுக்­கா­டாக இருந்­தது.

கடந்த ஆண்­டின் முதல் காலாண்­டைக் காட்­டி­லும் இவ்­வாண்­டின் முதல் காலாண்­டில் உற்­பத்­தித் துறை 7.5% ஏற்­றம் கண்­டது.

காலாண்டு அடிப்­ப­டை­யி­லும் உற்­பத்­தித் துறை வளர்ச்சி அடைந்­தது. 2020 கடை­சிக் காலாண்­டில் 1.4% சுருங்­கிய நிலை­யில், நடப்­பாண்­டின் ஜன­வரி-மார்ச் கால­கட்­டத்­தில் அத்­துறை 7.6% வளர்ச்சி கண்­டது.

கொவிட்-19 பர­வல் சார்ந்த சில வேலைக் கட்­டுப்­பா­டு­க­ளால் கட்டு­மா­னத் துறை 20.2% வீழ்ச்­சி­யைச் சந்­தித்­தது. இந்­தச் சரிவு, 2020 இறு­திக் காலாண்­டில் 27.4 விழுக்­கா­டா­க­வும் 2020 முழு ஆண்­டி­லும் 35.9 விழுக்­கா­டா­க­வும் இருந்­தது.

காலாண்டு அடிப்­ப­டை­யில் பார்க்­கை­யில், 2020 இறு­திக் காலாண்­டில் 55.6% ஏற்­றம் கண்ட கட்­டு­மா­னத் துறை­யின் வளர்ச்சி நடப்­பாண்­டின் முதல் காலாண்­டில் மெது­வ­டைந்து, 8.4 விழுக்­கா­டா­னது.

சேவைத் துறை­யும் தொடர்ந்து இறங்­கு­மு­கத்­தில் இருக்­கிறது. ஆண்டு அடிப்­ப­டை­யில் கடந்த காலாண்­டில் அத்­துறை 1.2% சுருங்­கி­யது. முந்­திய காலாண்­டில் இந்தச் சரிவு 4.7 விழுக்­கா­டா­க­வும் 2020 முழு­வ­தும் பார்க்­கை­யில் 6.9 விழுக்­கா­டா­க­வும் இருந்­தது.

ஆயி­னும், காலாண்டு அடிப்­படை­யில் சேவைத் துறை 0.4% வளர்ச்­சி­ய­டைந்­தது.

தங்­கு­மி­டம் மற்­றும் உணவு சேவை­கள், சொத்­துச் சந்தை, நிர்­வா­கம் மற்­றும் ஆத­ரவு சேவை­கள், பிற சேவைத் துறை­கள் ஆகி­யவை கடந்த ஆண்­டின் முதல் காலாண்டை ஒப்­பு­நோக்க, 2021 முதல் காலாண்­டில் 3.9% வளர்ச்சி கண்­டன.

அதே­போல, தக­வல் தொடர்பு, நிதி மற்றும் காப்­பு­றுதி, நிபு­ணத்­துவ சேவைத் துறை­கள் ஆகி­யவை ஒட்டு­மொத்­த­மாக 3.7% ஏற்­றம் கண்­டன. முந்திய காலாண்டில் இந்த வளர்ச்சி விகிதம் 1.4 விழுக்காடாக இருந்தது.