கல்வி, அனுபவத்தைவிட திறமைக்கு முன்னுரிமை

கல்வி, அனுபவத்தைவிட திறமைக்கு முன்னுரிமை

2 mins read
34541af2-8a8b-45c1-84e2-e8ede9ecffa4
-

வேலைக்கு ஆளெ­டுக்­கும்­போது வழக்­க­மான தகு­தி­க­ளைக் காட்­டி­லும் தொடர்­புத் திறன்­கள், சிக்­கல் தீர்க்­கும் திறன்­கள் மற்­றும் உத்­தி­பூர்­வ­மா­கச் சிந்­திக்­கும் திறன் கொண்­ட­வர்­க­ளுக்­குச் சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் முன்­னு­ரிமை அளிப்­ப­தாக 'லிங்க்­டு­இன்' கருத்­தாய்வு அறிக்கை தெரி­விக்­கிறது.

எதிர்­கா­லப் பணிச்­சூ­ழ­லைக் கருத்­தில்­கொண்டு, 39% நிறு­வனங்­கள் தொழில்­நுட்­பத் தேர்ச்சி பெற்­றி­ருப்­ப­வர்­க­ளை­யும் 31% நிறு­வ­னங்­கள் மாற்­றத்­தக்க தேர்ச்சி­க­ளைக் கொண்­டி­ருப்­ப­வர்­க­ளை­யும் நாடு­வ­தாக அந்தக் ­க­ருத்­தாய்வு கூறு­கிறது.

கல்­வித் தகு­திக்கு 8% நிறு­வனங்­களும் வேலை அனு­ப­வத்­திற்கு 12% நிறு­வ­னங்­களும் முன்­னு­ரிமை தரு­வ­தா­கத் தெரி­வித்­து உள்­ளன.

திறன் இடை­வெ­ளி­யைக் குறைக்க, தங்­க­ளது துறை­யை­விட்டு வேறு துறை­களில் இருந்­தும் ஆளெ­டுக்க ஐந்­தில் மூன்று நிறு­வ­னங்­கள் தயா­ராக இருக்­கின்­றன.

காலிப் பணி­யி­டங்­களை நிரப்ப நிறு­வ­னத்­திற்­குள்­ளேயே ஆள் தேடு­வ­தாக பத்­தில் ஒன்­பது நிறு­வனங்­களும் இப்­போது இருக்­கும் பணி­யா­ளர்­க­ளைக் கொண்டே அவ்­வே­லை­க­ளைப் பூர்த்தி செய்ய விரும்­பு­வ­தாக 65% நிறு­வ­னங்­களும் தெரி­வித்­துள்­ளன.

அதன்­பின் தேவை­க­ளைப் பூர்த்தி செய்ய ஊழி­யர்­க­ளின் திறன்­களை மேம்­ப­டுத்த நிறு­வனங்­கள் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். அந்த விஷ­யத்­தில், மனி­த­வளப் பிரிவு அதி­கப் பொறுப்­பு­களை ஏற்க வேண்­டி­யி­ருக்­க­லாம்.

ஊழி­யர் பயிற்­சி­யி­லும் மேம்­பாட்­டி­லும் மனி­த­வ­ளப் பிரிவு முக்­கி­யப் பங்­காற்­று­வ­தாக ஏறத்­தாழ 60% நிறு­வ­னங்­கள் கரு­து­வது அந்­தக் கருத்­தாய்­வின்­மூ­லம் தெரி­ய­வந்­துள்­ளது.

கொவிட்-19 பர­வ­லின்­போது தொழில் உத்­தி­கள் வடி­வ­மைப்­பில் மனி­த­வ­ளப் பிரிவு குறிப்­பி­டத்­தக்க பங்­காற்றி வரு­வ­தாக 57% நிறு­வனங்­கள் தெரி­வித்­துள்­ளன.

ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­தி­ல் உள்ள நிறு­வ­னங்­க­ளைச் சேர்ந்த 3,500 பேரும் மனி­த­வ­ளப் பிரிவு ஊழி­யர்­கள் மற்­றும் ஆட்­சேர்ப்பு மூத்த நிர்­வா­கி­கள் 505 பேரும் 'எதிர்காலத் திறனாளர்கள்' என்ற இந்த இணை­ய­வ­ழி கருத்­தாய்­வில் பங்­கேற்­ற­னர்.