தேசிய சம்பள மன்றம் 19ஆம் தேதி கூடுகிறது

தேசிய சம்பள மன்றம் 19ஆம் தேதி கூடுகிறது

1 mins read
1d5a828c-2c4f-4b90-ae9e-1cc82b4610a6
-

கொவிட்-19 நோய்ப் பரவல் காலகட்டத்தில் சம்பள, வேலை சேர்ந்த விவகாரங்கள் தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்வதற்காக இம்மாதம் 19ஆம் தேதி திங்கட்கிழமையன்று தேசிய சம்பள மன்றம் கூட இருக்கிறது.

அந்தக் கலந்தாய்வின்போது, உள்ளூர், அனைத்துலகப் பொருளியல் சூழல்கள், சிங்கப்பூரின் மீட்சி வேகம் போன்றவை கருத்தில்கொள்ளப் படும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

டிபிஎஸ் வங்கியின் தலைவர் பீட்டர் சியாவைத் தலைவராகவும் அரசாங்கம், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய தேசிய சம்பள மன்றம், அடுத்த மாத இறுதிவாக்கில் மேம்படுத்தப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளை அறிவிக்க இலக்கு கொண்டுள்ளது.

சம்பளம் மற்றும் வேலை விவகாரங்கள் தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை அவ்வப்போதைய சூழலுக்கு ஏற்ப மாற்றியமைப்பதற்காக ஆண்டுதோறும் அம்மன்றம் கூடும்.

கொரோனா பரவலையடுத்து தனது சம்பள வழிகாட்டி நெறிமுறைகளைக் கடந்த ஆண்டு அம்மன்றம் இரண்டாம் முறையாக மறுஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

1972ல் அம்மன்றம் தொடங்கப் பட்டதில் இருந்து, இப்படி ஒரே ஆண்டில் இருமுறை கூடியது இது 4வது முறை. முன்னதாக, 2009, 2001, 1998ல் அம்மன்றம் இரண்டு முறை கூடியது.