கொவிட்-19 தகவல்களைக் கசியவிட்ட முன்னாள் அதிகாரி மீது குற்றச்சாட்டு

கொவிட்-19 தகவல்களைக் கசியவிட்ட முன்னாள் அதிகாரி மீது குற்றச்சாட்டு

2 mins read
008cf6a7-0686-4a67-91b2-aef7224d1b3c
தகவல்களைக் கசியவிட்ட ஸாவோ செங் (இடது), அவரது தோழி டாங் லின். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சுகா­தார அமைச்­சின் தரவு நிர்­வா­கப் பிரி­வின் துணைத் தலை­வ­ராக முன்பு இருந்த ஸாவோ ஸெங் எனும் 36 வயது மாது, சிங்­கப்­பூ­ரில் தின­சரி கொவிட்-19ஆல் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் விவ­ரங்­களை 22 முறை கசி­ய­விட்­ட­தாக நேற்று நீதி­மன்­றத்­தில் குற்­றம் சாட்­டப்­பட்­டது.

ரக­சி­யத் தக­வல்­க­ளைக் கசி­ய­விட்­ட­தாக கடந்த ஆண்டு ஏப்­ரல் மாதத்­தில் கைது செய்­யப்­பட்ட அவர் மீது அலு­வ­லக ரக­சி­யங்­கள் சட்­டத்­தின்­கீழ் 24 குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன.

கொவிட்-19 நோயாளி ஒரு­வ­ரின் நிலை குறித்து ஸாவோ­வி­டம் விவ­ரம் கேட்டு தவ­றான தொடர்பு­ கொண்­ட­மைக்­காக ஸாவோ­வின் தோழி­யான 36 வயது டாங் லின் மீதும் நேற்று குற்­றம் சுமத்­தப்­பட்­டது. அலு­வ­லக ரக­சி­யங்­கள் சட்­டத்­தின்­கீழ் டாங் 10 குற்­றச்­சாட்­டு­களை எதிர்­நோக்­கு­கி­றார்.

தின­சரி கொவிட்-19 பாதிப்பு விவ­ரம் குறித்து சுகா­தார அமைச்சு அறி­விக்­கும் முன்­பா­கவே அந்­தத் தக­வல் கசிந்­தி­ருப்­ப­தாக கடந்த ஆண்டு ஏப்­ரல் மாதம் 16ஆம் தேதி பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து போலி­சுக்கு புகார் கிடைத்­த­தாக நேற்று முன்­தி­னம் வெளி­யான அறிக்கை குறிப்­பிட்டது.

அத்­த­கைய ரக­சிய தக­வல்­க­ளைப் பெற அனு­ம­தி­யற்ற உரை­யா­டல் குழு­வில் கடந்த ஆண்டு மார்ச், ஏப்­ரல் மாதங்­களில் அந்­தத் தக­வ­ல்களை ஸாவோ 22 முறை பகிர்ந்­ததாக விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது. அந்­தத் தக­வல்­க­ளைப் பெற்ற அல்­லது மற்­ற­வர்­க­ளுக்கு அனுப்­பிய 64 பேருக்கு அலு­வ­லக ரக­சி­யங்­கள் சட்­டத்­தின்­கீழ் கடும் எச்­ச­ரிக்கை அல்­லது எழுத்­து­பூர்வ ஆலோ­ச­னை­கள் வழங்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தச் சட்­டத்­தின்­கீழ் தவ­றான தொடர்­பு­கொள்­ளும் குற்­றம் புரி­வோ­ருக்கு $2,000 வரை அப­ரா­தம், ஈராண்­டு­கள் வரை சிறைத் தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம்.

அந்­தத் தக­வல்­க­ளைப் பெறும் அனு­ம­தி­யில்­லா­த­வர்­கள் அத்­த­கைய ரக­சி­யத் தக­வல்­க­ளைப் பெற்­றி­ருந்­தால் அவற்றை மற்­ற­வர்­க­ளுக்கு அனுப்­பா­மல் உடனே அழித்­து­விட வேண்­டும். இல்­லா­விட்­டால் அவர்­களும் அலு­வ­லக ரக­சி­யங்­கள் சட்­டத்­தின்­கீழ் குற்­றம்­சாட்­டப்­ப­டு­வர்.