பணிப்பெண்ணைத் தாக்கியவருக்கு 7 மாதச் சிறை

பணிப்பெண்ணைத் தாக்கியவருக்கு 7 மாதச் சிறை

2 mins read
3da5d91c-4267-4adb-a8cf-29773220deb3
-

பணிப்­பெண்ணை ஓங்கி அறைந்­த­தில் பணிப்­பெண்­ணுக்கு காது கேளாத நிலை ஏற்­பட்­டது. பணிப்­பெண்ணை அவ்­வாறு ஓங்கி அறைந்த முத­லா­ளிக்கு நேற்று 7 மாத சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

மியன்­மார் நாட்­டுப் பணிப்­பெண்­ணான 30 வயது தாங் கா லாமை 51 வய­தான முத­லாளி காயத்­திரி ஐயர் (படம்) இரு முறை துன்­பு­றுத்­தி­யது கடந்த பிப்­ர­வ­ரி­யில் நிரூ­ப­ண­மா­னது.

தஞ்­சோங் ரு ரோட்­டில் இருக்­கும் பெபிள் பே கொண்­டோ­மி­னி­யத்­தில் வசிக்­கும் காயத்­தி­ரி­யின் வீட்­டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் பணிப்­பெண்­ணா­கச் சேர்ந்­தார் திரு­வாட்டி தாங்.

அதே ஆண்டு அக்­டோ­பர் மாதம் 27ஆம் தேதி காயத்­தி­ரி­யு­டன் பேசிக்­கொண்­டி­ருந்­த­போது 'ம்மா' எனும் சொல்லை தாம் பயன்­ப­டுத்­தி­ய­தும் கோப­ம­டைந்த காயத்­திரி பணிப்­பெண்­ணின் தோளில் அடித்­தார். அத­னால் ஏற்­பட்ட உராய்வு காயம் மேல் தோளில் இருந்து கழுத்­து­வரை நீண்­டதை திரு­வாட்டி தாங் வைத்­தி­ருந்த புகைப்­ப­டம் காட்­டி­யது.

அதே ஆண்டு டிசம்­பர் மாதம் 7ஆம் தேதி, அப்­போது தேசிய சேவை செய்­து­கொண்­டி­ருந்த தம் மகனை திரு­வாட்டி தாங் எழுப்­பி­வி­டா­த­தற்­காக அவரை ஓங்கி அறைந்­தார் காயத்­திரி. அதி­காலை 5.40 மணி­ய­ள­வில் நிகழ்ந்த இந்­தச் சம்­ப­வத்­தின்­போது இடது காதில் இரு­மு­றை­யும் வலது காதில் ஒரு­மு­றை­யும் காயத்­திரி அறைந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

அதனை அடுத்து அன்று முழு­வ­தும் பணிப்­பெண்­ணின் இடது காது கேட்­க­வில்லை.

ஐந்து நாட்­க­ளுக்­குப் பிறகு காயத்­தி­ரி­யின் வீட்­டி­லி­ருந்து வெளி­யேறி, தாம் எதிர்­கொண்­ட­வற்றை போலி­சில் தெரி­வித்­தார் திரு­வாட்டி தாங். கடந்த 2018ஆம் ஆண்டு செப்­டம்­பர் மாதம் 5ஆம் தேதிக்­குள்­ளாக அவர் காயங்­க­ளி­லி­ருந்து தேறி­னார்.

சாங்கி சிறைச்­சா­லை­யில் 9 மாதங்­க­ளுக்கு முன்பு ஆலோ­ச­க­ராக இருந்­த­தை­யும், தன்­னு­டைய உறுப்­பு­களை தானம் செய்ய காயத்­திரி சம்­ம­தம் தெரி­வித்­த­தை­யும் குறிப்­பிட்டு 9 வார சிறைத்­தண்­டனை விதிக்­கும்­படி காயத்­தி­ரி­யின் வழக்­க­றி­ஞர் கோரி­னார்.

பணிப்­பெண்­ணுக்கு $5,330

இழப்­பீடு வழங்­க­வும் காயத்­தி­ரிக்கு ஆணை­யி­டப்­பட்­டது. தீர்ப்­புக்கு எதி­ராக மேல்­மு­றை­யீடு செய்­யும் காயத்­தி­ரிக்கு $15,000 மதிப்­பில் பிணை வழங்­கப்­பட்­டது. பணிப்­பெண்­ணைத் தாக்­கிய ஒவ்­வொரு குற்­றச் செய­லுக்­கும் அவ­ருக்கு மூன்­றாண்­டு­கள் வரை சிறை, $7,500 வரை அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டி­ருக்­க­லாம்.