8,580 கார்ட்டன் கள்ள சிகரெட் பறிமுதல்; அறுவர் கைது

8,580 கார்ட்டன் கள்ள சிகரெட் பறிமுதல்; அறுவர் கைது

1 mins read
3b3b98f5-158e-4e93-bf23-11af4eed66f6
-

வரி செலுத்தப்படாத 8,580 கார்ட்டன் கள்ள சிகரெட்டுகள் 12 கான்கிரீட் பாளங்களுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த வாகனத்தை கடந்த வியாழக்கிழமை போலிசார் பறிமுதல் செய்தனர். சிங்கப்பூர் சுங்கத்துறை, குடிநுழைவு மற்றும் சோதனைச்சாவடி ஆணையம் ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கைகளில் ஐந்து மலேசியர்கள், ஓர் இந்தோனீசியர் என அறுவர் கைது செய்யப்பட்டனர். பெஞ்சுரு வாக் பகுதியில் உள்ள சேமிப்புக் கிடங்குப் பகுதியில் சிகரெட் போன்ற பொருளைக் கண்ட சுங்கத்துறை அதிகாரிகள், சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தில் அவை ஏற்றப்பட்டதும் அறுவரைக் கைது செய்தனர். மொத்தம் $791,510 வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது.