கடந்த மாதம் 1,296 தனியார் வீடுகள் விற்கப்பட்டன. இந்த எண்ணிக்கை, பிப்ரவரி மாதத்தில் விற்கப்பட்ட 645 வீடுகளைக் காட்டிலும் அதிகம். ஆண்டு அடிப்படையில் சொத்து மேம்பாட்டாளர்கள் மார்ச் மாதத்தில் 96 விழுக்காடு கூடுதலாக விற்பனைகளைக் கொண்டுள்ளன. இந்த விற்பனையில் கிட்டத்தட்ட பாதி, உயர்ந்த மதிப்புள்ள வட்டாரங்களிலுள்ள சொகுசு கூட்டுரிமை வீடுகள்.
"ரொக்கம் அதிகமுள்ள வாடிக்கையாளர்கள் வீடு போன்ற பாதுகாப்பான சொத்துகளில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்," என்று ஹட்டன்ஸ் ஏஷியாவின் ஆய்வு இயக்குநர் திரு லீ சி டெக் தெரிவித்தார்.
இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை கிட்டத்தட்ட 3,574 புதிய தனியார் வீடுகள் விற்கப்பட்டுள்ளன. 2013ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 4,538 வீடுகள் விற்கப்பட்டதாக அவர் கூறினார்.

