இணையத் தொடர்புடைய 100 மில்லியன் சாதனங்களுக்கு ஆபத்து

இணையத் தொடர்புடைய 100 மில்லியன் சாதனங்களுக்கு ஆபத்து

2 mins read
92a80d15-7ec7-445d-8155-1663fde6fbdd
-

உல­கம் முழு­வ­தும் நூறு மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான, இணை­யத் தொடர்­பு­டன் கூடிய சாத­னங்­கள் எளி­தில் பாதிப்­புக்­குள்­ளா­கும் ஆபத்து இருப்பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளதை அடுத்து சிங்­கப்­பூர் இணை­யப் பாது­காப்பு அமைப்பு ஓர் எச்­ச­ரிக்­கையை விடுத்­துள்­ளது.

மருத்­து­வச் சாத­னங்­கள், அணி­யும் வகை­யி­லான உடற்­த­கு­திச் சாத­னங்­கள் முதல் எரி­சக்தி, ஆற்­றல் துறை­க­ளைச் சேர்ந்த முக்­கி­யத் தொழி­ல­கக் கட்­டுப்­பாட்­டுச் சாத­னங்­கள் வரை அவற்­றில் அடங்­கும்.

"பாதிக்­கப்­பட்ட தொழில்­நுட்ப அடுக்­கு­க­ளின் நிர்­வா­கி­கள் சரி­யாக்­கக் குறி­மு­றை­களை உட­ன­டி­யா­கப் பயன்­ப­டுத்­து­மாறு அறி­வு­றுத்­தப்­ப­டு­கின்­ற­னர்," என்று இணை­யப் பாது­காப்பு அமைப்­பின் கணி­னிப் பாது­காப்பு அவ­ச­ர­கா­லச் செயற்­குழு (சிங்­செர்ட்) தெரி­வித்­து இருக்கிறது.

பாதிப்­பு­க­ளுக்­குத் தீர்­வ­ளிக்­கக்­கூ­டிய பாது­காப்­புக் குறி­மு­றை­கள் ஏற்­கெ­னவே அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு­விட்­டன.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு மற்­றும் அர­சாங்­கத் துறை­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­களே பெரி­தும் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கக் கணி­னிப் பாது­காப்பு ஆய்­வா­ளர்­கள் பல­ரும் தெரி­வித்­துள்­ள­னர். பொழு­து­போக்கு, சில்­லறை விற்­பனை, உற்­பத்தி, நிதி சேவை­கள், தொழில்­நுட்­பம் ஆகி­யவை பாதிப்­புக்­குள்­ளான மற்ற துறை­கள்.

'டிஎன்­எஸ்' எனும் செயற்­க­ளப் பெயர் அமைப்பை நச்­சு­நி­ரல்­கள் பாதிக்­கின்­றன.

'Name:Wreck' என ஒட்­டு­மொத்­த­மாக அழைக்­கப்­படும் அந்த நச்சுநிரல்கள், 'ஸ்டேக்ஸ்' எனப்­படும் வரி­சை­முறை தக­வல் அடுக்கைப் பாதிப்­ப­தாக 'ஃபோர்ஸ்­கௌட் ரிசர்ச் லேப்ஸ்' எனும் இணை­யப் பாது­காப்பு நிறு­வ­னம் தெரி­வித்­து இருக்கிறது.

பாதிப்­புக்­குள்­ளான வரி­சை­முறை தக­வல் அடுக்­கைக் கொண்ட அனைத்­துச் சாத­னங்­க­ளுக்­கும் ஆபத்து இல்லை எனக் கூறிய அந்­நி­று­வ­னம், குறைந்­தது 100 மில்­லி­யன் சாத­னங்­க­ளே­னும் ஆபத்­தில் இருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டது.

தக­வல் தொழில்­நுட்­பக் கட்­ட­மைப்­பைச் சேர்ந்த உயர்­தி­றன் சேவை­ய­கங்­கள், திறன்­பே­சி­கள், அச்­சுப்­பொ­றி­கள், உடற்­த­குதி அணி­க­ரு­வி­கள், ஆளில்­லாப் போர் விமா­னம், 'எம்­ஆர்ஐ ஸ்கே­னர்' போன்ற முக்­கிய மருத்­து­வச் சாத­னங்­கள், தொழி­ல­கத் தயா­ரிப்பு இயந்­திர மனி­தர்­கள் உள்­ளிட்ட இணை­யத் தொடர்­பு­டன் கூடிய பல்­வ­கைச் சாத­னங்­களும் பாதிக்­கப்­பட வாய்ப்­புள்­ள­தா­கக் கூறப்­படு­கிறது.

ஐரோப்­பிய நாடு­கள், கனடா, அமெ­ரிக்கா, ஜப்­பான் ஆகிய நாடு­களே அதிக பாதிப்­புக்­குள்­ளாகி இருக்­க­லாம் என நம்­பப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் எத்­தனை சாத­னங்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன என்­பது தெளி­வா­கத் தெரி­ய­வில்லை.

பாது­காப்­புக் குறி­மு­றை­கள் ஏற்­கெ­னவே வந்­து­விட்­டா­லும், சில சாத­னங்­களில் அவற்றை நிறு­வு­வ­தற்­குச் சிர­ம­மாக இருக்­க­லாம் எனச் சொல்­லப்­ப­டு­கிறது.

எடுத்­துக்­காட்­டாக, பாதிக்­கப்­பட்ட சாத­னங்­கள் மைய அள­வில் நிர்­வ­கிக்­கப்­ப­டா­வி­டில், ஒவ்­வொரு சாத­னத்­தி­லும் தனித்­த­னி­யாக பாது­காப்­புக் குறி­மு­றையை நிறுவ வேண்­டும்.

பாது­காப்­புக் குறி­முறை கிடைக்­கா­வி­டில், கூறாக்­கும் கட்­டுப்­பா­டு­களை­யும் வெளிப்­பு­றத் தொடர்­பு­வழி­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­து­தல், பாதிப்­புக்­குள்­ளாக வாய்ப்­புள்ள சாத­னங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­து­தல் போன்ற முறை­யான பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளை­யும் எடுக்­கும்­படி நிறு­வ­னங்­க­ளுக்கு சிங்­செர்ட் அறி­வு­றுத்தி இருக்­கிறது.