செய்திக்கொத்து

மே-ஜூலை: வாகன உரிமைச் சான்றிதழ் ஒதுக்கீடு குறைப்பு

அடுத்த மே மாதத்தில் இருந்து ஜூலை மாதம் வரை கார் வாங்குவோருக்கும் விற்பவர்களுக்குமான வாகன உரிமைச் சான்றிதழ்களின் (சிஓஇ) எண்ணிக்கை குறைக்கப் படவுள்ளன. இப்போதுள்ள நிலையில் இருந்து அது 10.6% குறையும்.

மே முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில், மாதத்திற்குச் சராசரியாக 3,792 கார் 'சிஓஇ'க்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தனது காலாண்டு அறிவிப்பின் வாயிலாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை இந்த மாதாந்திர சராசரி 4,241ஆக இருந்து வருகிறது. 2020 நவம்பர் - 2021 ஜனவரி காலகட்டத்தில் கார் 'சிஓஇ' ஒதுக்கீடு மாதாந்திர சராசரி 4,865ஆக இருந்தது. 1,600சிசி மற்றும் 130பிஎச்பி வரை திறன் கொண்ட 'ஏ' பிரிவு கார்களையும் 1600சிசி அல்லது 130பிஎச்பிக்கு மேல் திறன் கொண்ட 'பி' பிரிவு கார்களையும் எந்த வகை வாகனங்களையும் பயன்படுத்தக்கூடிய பொதுப் பிரிவையும் இது உள்ளடக்கும்.

வர்த்தக வாகனங்களுக்கான 'சிஓஇ' எண்ணிக்கையும் தொடர்ந்து இரண்டாவது காலாண்டாகக் குறைக்கப்படுகிறது. இப்போது மாதத்திற்கு 511ஆக இருந்த அந்த எண்ணிக்கை, மே முதல் தொடங்கும் காலாண்டில் 38.6%, அதாவது 314ஆக குறைக்கப்படும். மோட்டார்சைக்கிள்களுக்கான 'சிஓஇ' ஒதுக்கீடு தொடர்ந்து உயர்த்தப்படவுள்ளது. இப்போது மாதத்திற்கு 1,083ஆக இருக்கும் அந்த எண்ணிக்கை, அடுத்த காலாண்டில் மாதத்திற்கு 1,228ஆக அதிகரிக்கப்படும்.

ஒட்டுமொத்தத்தில், இப்போது மாதத்திற்கு 5,835ஆக உள்ள 'சிஓஇ' எண்ணிக்கை, அடுத்த காலாண்டில் மாதத்திற்கு 5,334ஆகக் குறைக்கப்படும்.

மின்னிலக்கத்தில் கவனம் செலுத்தும் சிங்டெல் கூட்டாளி 'பார்தி ஏர்டெல்'

சிங்டெல் நிறுவனத்தின் கூட்டாளியான இந்தியாவின் 'பார்தி ஏர்டெல்' தொலைத்தொடர்பு நிறுவனம், மின்னிலக்கத்தில் மிகுந்த கவனம் செலுத்துவதற்காக புதிய பெருநிறுவனக் கட்டமைப்பை அறிவித்துள்ளது. அப்புதிய கட்டமைப்பு 'பார்தி ஏர்டெல்' நிறுவனத்தின் எதிர்காலப் போக்கைத் தீர்மானிக்கும் என்ற அந்நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டல், மின்னிலக்கம், இந்தியா, அனைத்துலகம், உள்கட்டமைப்பு ஆகிய நான்கு தனித்துவ அம்சங்களில் மிகுந்த கவனம் செலுத்த உதவும் என்றும் சொன்னார்.

நாட்பட்ட காயத்தால் துன்பப்படும் நோயாளிகளுக்கு உதவ புதிய திட்டம்

ஏதேனும் நோய் காரணமாக எழுந்திருக்க முடியாமல் படுக்கையிலேயே இருப்பதால் உடலில் ஏற்படும் புண் (பெட்சோர்), நீரிழிவால் பாதத்தில் ஏற்படும் புண் போன்ற நாட்பட்ட காயங்களால் துன்பப்படும் முதிய நோயாளிகளுக்கு மேம்பட்ட சிகிச்சையை உறுதிசெய்ய புதிய புரிந்துணர்வுக் குறிப்பு வகைசெய்கிறது. அத்தகைய காயங்களுக்கு அதிக நாள்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டி இருக்கலாம் என்பதால், அது சுகாதாரப் பராமரிப்பு வளங்கள் மீது சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என ஓர் ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது. இதை எதிர்கொள்வதற்காக டான் டோக் செங் மருத்துவமனையின் ஆசிய தாதிமைக் கல்வி மையமும் சிங்கப்பூர் தோல் ஆராய்ச்சி நிலையமும் ஒரு புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒத்துழைப்பால் பலதுறை மருந்தகங்களைச் சேர்ந்த தாதியரும் நாட்பட்ட சமூக சுகாதாரத் தாதியரும் அதிக பயிற்சி வாய்ப்புகளைப் பெறலாம். காயத்தை ஆற்றத் துணைபுரியும் புத்தாக்கத் தயாரிப்புகளுக்கும் இந்தப் புரிந்துணர்வுக் குறிப்பு வழிவகுக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!