வளமான வரலாற்றைக் கொண்டுள்ள சாங்கி பாயிண்ட் வட்டாரத்தைப் புதுப்பிப்பது குறித்தும் பழைய சாங்கி மருத்துவமனைக்கான மறுபயன்பாட்டுத் திட்டம் குறித்தும் பொதுமக்களின் கருத்துகளை அதிகாரிகள் நாடுகின்றனர்.
சாங்கி பாயிண்ட் வட்டாரம் பெரும்பாலும் விளையாட்டுகளுக்கும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு சாங்கி பாயிண்ட் வட்டாரம் புதுப்பிக்கப்பட்டாலும் அதன் இயற்கை அழகையும் மரபுடைமையையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிகாரிகள் உறுதியாக இருக்கின்றனர்.
பொதுமக்களின் கருத்துகளைப் பெற போட்டி ஒன்றுக்கு சிங்கப்பூர் நில ஆணையம், நகர மறுசீரமைப்பு ஆணையம் ஆகியவை ஏற்பாடு செய்துள்ளன.
போட்டி நேற்று தொடங்கியது. கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் வரும் ஜூன் மாதம் 9ஆம் தேதியாகும்.
போட்டியில் இரண்டு பிரிவுகள் உள்ளன. உயர்கல்வி நிலையங்களில் வடிவமைப்புத் துறையில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு பிரிவும் மற்ற அனைவருக்கும் ஒரு பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
போட்டியில் பங்கெடுப்பவர்கள் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளிலும் பங்குபெறலாம்.
முதல் போட்டி சாங்கி பாயிண்ட் வட்டாரத்தின் ஒட்டுமொத்த புதுப்பிப்புத் திட்டம் தொடர்பானது.
இரண்டாவது போட்டியில் பங்கெடுப்பவர்கள் பழைய சாங்கி மருத்துவமனையை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்ற கருத்துகளை முன்வைக்க வேண்டும்.
சாங்கி பாயிண்ட் வட்டாரத்
துக்கு மேலும் பலரை ஈர்க்கும் வகையில் போட்டியாளர்களின் பரிந்துரைகள் அமைய வேண்டும்.
தீவிர மேம்பாட்டுப் பணிகளைக் காட்டிலும் அவ்வட்டாரத்தில் தற்போது உள்ள உள்கட்டமைப்புகளை மறுபயன்பாடு செய்யும் வழிவகை
களைப் பரிந்துரை செய்ய வேண்டும்.
பழைய சாங்கி மருத்துவமனையைப் பொறுத்தவரை அதன்
கட்டட வடிவமைப்பைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

