கொவிட்-19: ஸ்கூட் விமானங்கள் ஹாங்காங்கில் தரையிறங்க தற்காலிகத் தடை

கொவிட்-19: ஸ்கூட் விமானங்கள் ஹாங்காங்கில் தரையிறங்க தற்காலிகத் தடை

1 mins read
74948905-9140-47da-b9c7-de5df5b6e768
-

இன்று முதல் இம்­மா­தம் 29ஆம் தேதி வரை சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து செல்­லும் மலி­வுக் கட்­டண

விமா­னச் சேவை­யான ஸ்கூட் ஹாங்­காங்­கில் தரை­யி­றங்க முடி­யாது.

சில நாட்­க­ளுக்­கும் முன்பு சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து ஹாங்­காங்­கிற்­குச் சென்ற ஸ்கூட் விமா­னத்­தில் இரு­வ­ருக்கு கொவிட்-19 பாதிப்பு இருந்­ததை அடுத்து இந்­தத் தற்­கா­லி­கத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

ஏப்­ரல் 11ஆம் தேதி ஹாங்­காங்­கில் தரை­யி­றங்­கிய ஸ்கூட் T980 விமா­னத்­தில் பய­ணம் செய்த இரு­வ­ருக்கு கிரு­மி தொற்றி­யி­ருப்­பது உறுதி செய்­யப்­பட்­ட­தாக ஹாங்­காங் சுகா­தா­ரத் துறை கூறி­யது. மேலும் ஒரு­வர் சுகா­தார விதி­மு­றை­க­ளுக்கு உட்­பட்டு நடக்­க­வில்லை என்­றும் அது தெரி­வித்­தது.

தனக்கு எதி­ராக ஹாங்­காங் தற்­கா­லி­கத் தடை விதித்­தி­ருப்­பதை ஸ்கூட் உறுதி

செய்­துள்­ளது.

ஏப்­ரல் 17ஆம் தேதி­யி­லி­ருந்து ஹாங்­காங்­கிற்­கான சேவையை சிங்­கப்­பூர் ஏர்­லைன்­சுக்­குச் சொந்­த­மான ஸ்கூட் விமா­னச் சேவை மீண்­டும் தொடங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.