கைபேசி கேமராவின் தரத்தைப் பரிசோதிக்கவே பெண்களின் பாவாடைக்குள் காணொளி எடுத்ததாக கூறிய பொறியாளர்

கைபேசி கேமராவின் தரத்தைப் பரிசோதிக்கவே பெண்களின் பாவாடைக்குள் காணொளி எடுத்ததாக கூறிய பொறியாளர்

1 mins read
2ea4ce75-9e33-4a96-9638-22833deee3a8
பிடோக், சிராங்கூன் எம்ஆர்டி நிலையங்கள், சன்டெக் சிட்டி கடைத்தொகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 10 பெண்களின் பாவாடைக்குள் காணொளி எடுத்தார் அபெல் டான் இயூ ஹோங், 28. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தமது கைபேசியைக் கொண்டு பெண்களின் பாவாடைக்குள் காணொளி எடுத்த பொறியாளர் ஒருவர், தமது கைபேசி கேமராவின் தரத்தைப் பரிசோதிக்கவே அவ்வாறு தாம் செய்ததாகக் கூறினார்.

2019 ஜூலை 24க்கும் செப்டம்பர் 10க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பிடோக், சிராங்கூன் எம்ஆர்டி நிலையங்கள், சன்டெக் சிட்டி கடைத்தொகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 10 பெண்களின் பாவாடைக்குள் காணொளி எடுத்தார் அபெல் டான் இயூ ஹோங், 28.

இவருக்கு இன்று (ஏப்ரல் 16) 11 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பெண்களின் மானத்திற்குப் பங்கம் விளைவித்ததாக மூன்று குற்றச்சாட்டுகளை இவர் ஒப்புக்கொண்டார்.

மின்படிக்கட்டுகளில் பெண்களுக்குப் பின்னால் நின்றவாறு தமது 'சோனி எக்ஸ்பிரியா' கைபேசியைக் கொண்டு காணொளிகளை எடுத்தார் டான்.

பிடோக் எம்ஆர்டி நிலையத்தில் அத்தகைய காணொளி ஒன்றை எடுத்தபோது இவர் பிடிபட்டு போலிசிடம் ஒப்படைக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்