மனைவியைத் தாக்கியதுடன் அவர் குளித்துக் கொண்டிருந்தபோது காணொளி எடுத்தவருக்குச் சிறை

மனைவியைத் தாக்கியதுடன் அவர் குளித்துக் கொண்டிருந்தபோது காணொளி எடுத்தவருக்குச் சிறை

1 mins read
f9949105-0683-4bfe-ae17-4528960fe63e
மனைவியின் உடலைப் பல நாட்களாக பார்க்காததால் அந்த ஏக்கத்தில் காணொளி பதிவு செய்ததாகவும் ஆடவர் கூறியிருந்தார். படம்: அன்ஸ்பிளேஷ் -

மனைவியைத் தாக்கியதுடன் அவர் குளித்துக் கொண்டிருந்தபோது காணொளி ஒன்றையும் பதிவு செய்த 57 வயது ஆடவருக்கு இன்று (ஏப்ரல் 16) 18 வாரச் சிறைத் தண்டனையும் $3,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

மனைவி வருமானம் ஈட்டாததன் தொடர்பில் இருவருக்கும் சண்டை மூண்டு, ஆடவர் மனைவியைத் தாக்கியதாகக் கூறப்பட்டது. மேலும், மனைவியின் உடலைப் பல நாட்களாக பார்க்காததால் அந்த ஏக்கத்தில் காணொளி பதிவு செய்ததாகவும் ஆடவர் கூறியிருந்தார்.

இது மனைவியின் கவனத்திற்கு வர அவர் போலிசிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் அந்த ஆடவரைக் கைது செய்தனர்.

குறிப்புச் சொற்கள்