தாம்சன் ரோட்டில் 4 மாடி கட்டடம் இடிக்கப்படும்

தாம்­சன் ரோட்­டில் உள்ள ஒரு நான்கு மாடி கட்­ட­டம் பாது­காப்­பு காரணங்களுக்காக இடிக்­கப்­படும் என்று அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

அந்­தக் கட்­ட­டம் வடக்கு-தெற்கு வழித்­த­டத்­துக்­கான சுரங்­கப்­பாதை அமை­யும் இடத்­துக்கு அருகே உள்­ளது. அதைக் கட்டி 57 ஆண்­டு­கள் ஆகின்­றன. அதில் 12 வீடு­களும் நான்கு கடை­களும் இருக்­கின்­றன.

எண் 68-74 தாம்­சன் ரோடு முக­வ­ரி­யில் அமைந்­துள்ள அந்தக் கட்­ட­டம் கைய­கப்­ப­டுத்­தப்­பட்டு இடிக்­கப்­படும் என்­றும் அதற்­குப் பிறகு சுரங்­கப்­பாதை பணி­கள் தொடங்­கும் என்­றும் நிலப் போக்கு­வ­ரத்து ஆணை­யம், சிங்­கப்­பூர் நில ஆணை­யம், கட்­டட, கட்­டு­மான ஆணை­யம் ஆகி­யவை கூட்­ட­றிக்­கை­யில் தெரி­வித்­தன.

வடக்குப் புறத்­தில் இருக்­கும் நகர்­களை இணைக்­கும் அந்­தச் சுரங்­கப்­பா­தைப் பணி­கள் தொடங்கு­வ­தற்கு முன்­பாக அந்­தக் கட்­ட­டத்­தின் அடித்­த­ளத்­தைப் பலப்­படுத்­தும் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் அந்­தக் கட்­ட­டத்­தின் பலத்தை முற்­றி­லும் பரி­சோ­தித்­தது.

கட்­ட­டத்­தின் அடித்­த­ளம் சீராக இல்லை என்­பதை பொறி­யா­ளர்­கள் சென்ற ஆண்டு கண்­ட­னர். அடித்­தளத்­தைப் பலப்­ப­டுத்­தி­னால்­தான் சுரங்­கப்­பாதை வேலை­களைக் கட்­ட­டம் தாங்கி நிற்­கும் என்று பொறி­யா­ளர்­கள் கண்­ட­னர்.

பாது­காப்பு கார­ணங்­களை முன்­னிட்டு அந்­தக் கட்­ட­டத்­தில் இருந்த அனை­வ­ரும் வேறு இடங்­க­ளுக்கு மாறி­னர். பிறகு மேலும் பரி­சோ­த­னை­கள் நடத்­தப்­பட்­டன.

எதிர்­பார்க்­கப்­பட்­ட­தை­விட அந்­தக் கட்­ட­டத்­தின் கான்­கி­ரீட்­டு­கள் பல­வீ­ன­மாக இருப்­பது பரி­சோ­தனை­கள் மூலம் தெரி­ய­வந்­தது.

அந்த 776 சதுர மீட்­டர் பரப்­புள்ள நிலப்­ப­குதி தொடர்­பான பற்று­மா­னம் குறித்து நேற்று அர­சி­த­ழில் வெளி­யி­டப்­பட்­டது.

இத­னி­டையே, அக்கட்­ட­டத்­தில் உள்ள 16 வீடு­கள் மற்­றும் கடை­களின் உரி­மை­யா­ளர்­க­ளு­டன் அணுக்­க­மா­கச் செயல்­பட்டு அவர்­களுக்­குத் தேவைப்­படும் உத­வி­களைச் செய்­யப்­போ­வ­தாக போக்­கு­வ­ரத்து ஆணை­ய­மும் நில ஆணை­ய­மும் தெரி­வித்­தன.

நில ஆணை­யம் வரும் ஜூலை­யில் கட்­ட­டத்தைக் கைய­கப்­ப­டுத்­தும். இந்த ஆண்டு முடி­வில் இடிப்­புப் பணி­கள் தொடங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கட்­ட­டத்­தைக் கைய­கப்­ப­டுத்தி இடிப்­ப­தால் வடக்கு-தெற்கு வழித்­தட கட்­டு­மா­னத்­தின் கால அள­வில் பாதிப்பு இராது என அதி­காரி­ கள் தெரி­வித்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!