ஆஸ்திரேலியா ரயில் சந்தையில் எஸ்டி இன்ஜினியரிங்
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்டவுன் மாநிலத்தின் ஆகப்பெரிய பொது உள்கட்டமைப்புத் திட்டமாக 'அக்கரை ரயில் திட்டம்' என்ற ஒரு திட்டம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வருகிறது. அந்த 10.2 கி.மீ. நீள திட்டத்தில் 6.9 கி.மீ. தொலைவு பிரிஸ்பன் ஆறு மற்றும் பிரிஸ்பன் மத்திய பகுதிக்கு அடியில் இரண்டு சுரங்கங்களாக அமையும்.
அந்தத் திட்டத்தின்படி பூமிக்குக் கீழே நான்கு நிலையங்கள் கட்டப்படுகின்றன.
அந்த நிலையங்களின் நடைமேடைகளில் பொருத்து வதற்காக 96 ஜோடி கதவுகளைத் தயாரித்துக் கொடுக்கும் உடன்பாடு தனக்குக் கிடைத்துள்ளதாக சிங்கப்பூரின் எஸ்டி இன்ஜினியரிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக தொழில்நுட்ப, தற்காப்பு, பொறியியல் குழுமமான எஸ்டி இன்ஜினியரிங், இதன் மூலம் ஆஸ்திரேலிய ரயில் சந்தையில் முதன்முதலாக பங்கெடுத்துக்கொண்டுள்ளது.
"எஸ்டி இன்ஜினியரிங் நிறுவனத்தின் நகரமய தொழில் ஈடுபாட்டைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா ஒரு புதிய சந்தையாக இருக்கிறது.
"இந்த நிறுவனம் தயாரித்து கொடுக்கும் நடைமேடை கதவுகள், நடைமேடைக்கும் ரயில் தண்டவாளத்துக்கும் இடையில் பாதுகாப்பு தடுப்பாக மட்டுமின்றி ரயில் நிலையங்களில் வெப்பநிலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும்," என்று இந்த நிறுவனத்தின் துறைத் தலைவரான சியூ மென் லியோங் கூறினார்.நிலக்கரி நிறுவனங்களுக்கு கடன் அளிப்பதை டிபிஎஸ் நிறுத்தும்
சிங்கப்பூரின் ஆகப்பெரிய வங்கியான டிபிஎஸ், கட்டம் கட்டமாக 2039ஆம் ஆண்டு வாக்கில் நிலக்கரி தொழில்துறை நிறுவனங்களுக்குக் கடன் கொடுப்பதை நிறுத்திவிடும். இதன் மூலம் இப்படிச் செய்யும் முதல் வங்கியாக டிபிஎஸ் திகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் வருவாயில் கால்வாசிக்கும் அதிக தொகையை நிலக்கரி தொழில் மூலம் பெறுகின்ற புதிய வாடிக்கை யாளர்களுக்கு வங்கி கடன் கொடுக்காது என்றும் இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் டிபிஎஸ் நேற்று அறிவித்தது.
தங்கள் வருவாயில் பாதிக்கும் அதிக தொகையை நிலக்கரி தொழில் மூலம் பெறுகின்ற வாடிக்கையாளர் களுக்கு 2026 ஜனவரி முதல் வங்கி கடன் கொடுக்காது.
நிலக்கரியில் முதலீடுகளைத் தவிர்க்கும்படி பங்குதாரர்களிடம் இருந்தும் இதர அமைப்புகளிடம் இருந்தும் நிதி நிறுவனங்களுக்கு உலக அளவில் நெருக்குதல்கள் அதிகமாகி வருகின்றன. இந்தச் சூழலில் டிபிஎஸ் இவ்வாறு உறுதி அளித்துள்ளது.
இந்த வங்கியின் சுற்றுச்சூழல் ஆதரவு அறிக்கை 2020ஐ பார்க்கையில், நிலக்கரி மற்றும் நிலக்கரியில் செயல்படும் அனல் மின் நிலையங்களில் டிபிஎஸ் போட்டுள்ள தொகை 2019 முடிவில் முறையே $1.17 பில்லியனாகவும் $1.63 பில்லியனாகவும் இருந்தது.
அதேவேளையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்தி திட்டங்களில் இந்த வங்கி செய்துள்ள முதலீடு 2020ல் $4.2 பில்லியனாக அதிகரித்தது. 2019ல் இது $2.85 பில்லியனாக இருந்தது.

