தட்டுகளைத் திருப்பித் தருவதற்காக ஒதுக்கப்படும் இடவசதி தொடர்பில் உணவங்காடிகளுக்குப் புதிய நிதி

2 mins read
1332267e-14f5-489a-b308-ef117b564fd8
புதிய ஆதரவுத் திட்டத்தால் தட்டுகளைச் சுத்தம் செய்யும் துப்புரவாளர் பணி மேலும் எளிதாகும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சாப்­பிட்டு முடித்­த­வு­டன் தட்­டு­களைத் திருப்­பித் தரு­வ­தற்­காக ஒதுக்­கப்­படும் இட­வ­ச­தி­யைக் கூடு­த­லாக்­கும் காப்­பிக் கடை­கள் மற்­றும் கடைத்­தொ­குதி உண­வங்­காடி நிலை­யங்­க­ளுக்­குப் புதிய நிதித் திட்­டம் ஒன்று நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும்.

பொது இடங்­களில் உணவு சாப்­பிட்ட பிறகு, வாடிக்­கை­யா­ளர்­கள் தாங்­கள் அமர்ந்­தி­ருந்த இடத்தில் பயன்படுத்திய தட்டுகளை அப்­பு­றப்­ப­டுத்­து­வது தொடர்­பில் தொடங்­கப்­பட்ட தேசிய அள­வி­லான இயக்­கத்­தின் ஓர் அங்­கம், இத்­திட்­டம்.

இதன்­படி, உண­வுத் தட்­டு­களைத் திருப்பி வைப்­ப­தற்­காக கூடு­தல் இட­வ­ச­தியை ஒதுக்க, காப்­பிக் கடை­க­ளுக்­கும் உண­வங்­காடி நிலை­யங்­க­ளுக்­கும் நிதி வழங்­கப்­படும்.

தேசிய சுற்­றுப்­புற அமைப்­பால் தொடங்­கப்­பட்ட இந்த 'கிளீன் டேபல்ஸ்' ஆத­ர­வுத் திட்­டம் வழி, சுமார் 1,125 காப்­பிக் கடை­களும் 220 உண­வங்­கா­டி­களும் பல­ன­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்த ஆத­ர­வுத் திட்­டம் முதன்­மு­த­லில் பிப்­ர­வரி மாதத்­தில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­ட­போது, ஒரு சில உண­வங்­காடி நிலை­யங்­களில் தட்­டு­க­ளைத் திருப்­பித் தரு­வ­தற்­கான இட­வ­சதி மேலும் அதிகப்படுத்தித் தரப்­பட்­டது.

அதை­ய­டுத்து, இந்­நி­தித் திட்­டம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தட்­டு­களை மீண்­டும் வைக்­கும் இடங்­கள், கண்­ணெ­திரே இருப்­ப­து­டன் வச­தி­யாக இருந்­தால் மக்­கள் தங்­க­ளின் தட்­டு­க­ளைத் திருப்­பித் தர ஊக்­கு­விக்­கப்­ப­டு­வர் என்­றார் சுற்­றுப்­புற, நீர்­வள அமைச்­சுக்­கான மூத்த துணை அமைச்­சர் ஏமி கோர்.

"சில சம­யங்­களில் தட்­டு­களை வைப்­ப­தற்­கு போது­மான இட­வசதி இருக்­காது. பார்க்க முடி­ய­வில்லை, கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை என்ற நிலை­யில் அதைத் தேடிச் செல்ல நேர­மும் சில­ருக்கு இருக்­காது," என்­றார் டாக்­டர் கோ.

வாடிக்­கை­யா­ளர்­கள் தங்­க­ளின் தட்­டு­க­ளைத் திருப்­பித் தரு­வ­தால், துப்­பு­ர­வா­ளர்­க­ளுக்கு ஏற்­படும் சிர­மங்­க­ளை­யும் வேலைப் பளு­வை­யும் குறைக்க முடி­யும் என்று வலி­யுறுத்­தி­னார் அவர்.

பொதுச் சுகா­தா­ரத் தரக் குறி­யீ­டு­களே, தொற்­று­நோய்­கள் பர­வு­வ­தற்கு எதி­ரான முதல் நிலை தற்­காப்பு என்­றார் அமைச்­சர்.

இந்த புதிய ஆத­ர­வுத் திட்­டத்­திற்­கான விண்­ணப்­பங்­கள் மே 1ஆம் தேதி முதல் சமர்ப்­பிக்­கப்­ப­ட­லாம். தங்­க­ளுக்கு ஏற்­படும் செல­வில் பாதியை இத்­திட்­டம் வழி காப்­பிக் கடை­களும் உண­வங்­காடி நிலை­யங்­களும் சரி­கட்­ட­லாம் என்று கூறப்­பட்­டது.

இதற்­கி­டையே, தட்­டு­களை வைப்­ப­தற்­காக மேலும் 75 இடங்­களை உண­வங்­காடி நிலை­யங்­களில் தேசிய சுற்­றுப்­பற அமைப்பு அமைக்கவுள்­ளது. ஏற்­கெ­னவே, 111 நிலை­யங்­களில் உள்ள 900 இடங்­க­ளுக்­கும் கூடு­த­லாக இவை அமைந்­தி­டும் என்று கூறப்­பட்­டது.

துப்­பு­ர­வுத் துறை­யில் ஊழி­யர் தட்­டுப்­பாட்­டைச் சமா­ளிக்­கப் பெரி­தும் கைகொ­டுக்­கும் என்று கூறிய உண­வுக் கடைக்­கா­ரர்­கள், புதிய திட்­டத்தை வர­வேற்­றுள்­ள­னர்.