செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
094e93eb-42d6-4edd-9dcb-1031317c37a7
-

மனைவிக்குத் தொல்லை கொடுத்த ஆடவருக்குச் சிறை

மனைவியைத் தாக்கியதுடன் அவர் குளித்துக் கொண்டிருந்தபோது காணொளி ஒன்றையும் பதிவு செய்த 57 வயது ஆடவருக்கு நேற்று 18 வாரச் சிறைத் தண்டனையும் $3,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மனைவி வருமானம் ஈட்டாததன் தொடர்பில் இருவருக்கும் சண்டை மூண்டு, ஆடவர் மனைவியைத் தாக்கியதாகக் கூறப்பட்டது. மேலும், மனைவியின் உடலைப் பல நாட்களாக பார்க்காததால் அந்த ஏக்கத்தில் காணொளி பதிவு செய்ததாகவும் ஆடவர் கூறியிருந்தார்.

புதிய பல்கலைக்கழக திட்டத்திற்கு மில்லியன் கணக்கில் நன்கொடை

எளிதில் பாதிப்படையக்கூடிய சமூகங்களுக்கான சமூக உருமாற்ற புதிய ஆதரவுத் திட்டம் ஒன்று, சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் தொடங்கவுள்ளது. அதற்காக கிட்டத்தட்ட $2.4 மில்லியன் நன்கொடை அளிக்கப் பட்டுள்ளது. நன்கொடை வழி மாணவர்களுக்கு உபகாரச் சம்பளமும் வழங்கப்படும். இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 11 மாணவர்கள் பலனடைவர்.