'அடையாளம் இல்லா' கார்களை விற்க உதவிய மாணவருக்குச் சிறை தண்டனை

'அடையாளம் இல்லா' கார்களை விற்க உதவிய மாணவருக்குச் சிறை தண்டனை

2 mins read
23a19f96-e0c7-46d7-89a8-55428c8caf5d
-

குற்­றம் புரி­வ­தற்­காக 'அடை­யா­ளம் அறி­யப்­ப­டாத' கார்­கள் வேண்­டும் என நாடி­யோ­ருக்கு, அவற்றை விற்க உத­விய 28 வயது சிங்­கப்­பூ­ர­ருக்கு 26 மாதம், இரண்டு வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம், சிங்­கப்­பூர் சுங்­கச்­சா­வடி ஆகி­ய­வற்றை ஏமாற்­றி­ய­தன் தொடர்­பி­லான குற்­றச்­சாட்­டு­களை சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­கலைக்­க­ழக இறு­தி­யாண்டு மாண­வர் டான் வென் ஜியெ, சென்ற மாதம் ஒப்­புக்­கொண்­டார்.

பதி­வேட்­டி­லி­ருந்து அகற்­றப்­பட்ட கார்­களை விற்­பது, வாட­கைக்­குப் பெறு­வது ஆகி­யவை தொடர்­பில் லீ வுய் லியாங் என்­ப­வ­ரு­டன் டான் 2018 செப்­டம்­ப­ரில் குற்­றம் புரிந்­த­தாக கூறப்­ப­டு­கிறது.

வாகன உரி­மைச் சான்­றி­தழ் காலா­வ­தி­யா­கும் நிலை­யில் உள்ள கார்­களை டான் வாங்கி, அவற்­றில் மாற்­றங்­கள் செய்து மீண்­டும் வேறொ­ரு­வ­ரி­டம் விற்­றார் எனக் கூறப்­ப­டு­கிறது.

ஒரே நிறம், வடி­வம், மாதிரி என்ற அடிப்­ப­டை­யில் ஏற்­கெ­னவே பதி­வேட்­டில் உள்ள ஒரு வாக­னத்­தின் பதிவு எண் பலகை போலவே போலி பல­கையை டான் தயா­ரித்து அந்த கார்­களை விற்­று­வந்­த­தாக கூறப்­ப­டு­கிறது.

'கரோ­சல்' தளத்­தில் இவ்­வாறு மாற்­றம் செய்­யப்­பட்ட கார்­கள் ஓர் இடைத்­த­ர­கர் மூலம் விற்­கப்­பட்டோ வாட­கைக்கு விடப்­பட்டோ வந்­தன.

'கேள்­வி­கள் ஏதும் கேட்­கப்­படா' என்ற அடிப்­ப­டை­யில் இந்த பரி­வர்த்­த­னை­கள் நடந்து வந்­தன.

காரை வாங்­கு­வோர், முறை­யாக வாக­னம் ஓட்­டும் தகு­தி­யு­டை­ய­வரா என்­பது குறித்­தும் தளத்­தில் எவ்­வித உறு­தி­யும் செய்­யப்­ப­டு­வ­தில்லை என்று கூறப்­பட்­டது.

இத்­த­கைய குற்­றங்­கள் இனி நடக்­கக்­கூ­டாது என்­ப­தைத் தடுக்­கும் வகை­யில் தண்­டனை விதிக்­கப்­பட வேண்­டும் என்று நீதி­பதி மார்­வின் பே கூறி­னார்.

தண்­ட­னைக்கு எதி­ராக டான் மேல்­மு­றை­யீடு செய்­வ­தா­கக் கூறப்­பட்­டது.