தூக்குப் படுக்கை தள்ளுவண்டியிலிருந்து விழுந்து நேர்ந்த மரணம், மருத்துவ விபத்தே

தூக்குப் படுக்கை தள்ளுவண்டியிலிருந்து விழுந்து நேர்ந்த மரணம், மருத்துவ விபத்தே

2 mins read
9e00ce7c-aa2a-463e-a428-b062742314bf
-

ஒரு மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்து மற்­றொரு மருத்­து­வ­ம­னைக்கு நோயாளி ஒரு­வ­ரைக் கொண்டு சென்­ற­போது, தூக்­குப் படுக்கை தள்­ளு­வண்­டி­யி­லி­ருந்து நோயாளி விழுந்­து­விட்­டார். பின்­னர், அவர் இறந்­தும் போனார். இந்­நி­லை­யில், அவ­ருக்கு நேர்ந்த மர­ணம், ஒரு மருத்­துவ விபத்து என்று மரண விசா­ரணை நீதி­மன்­றத்­தில் தீர்ப்­பானது. இதற்­கி­டையே 2018ஆம் ஆண்­டில் திரு ரஸிப் பஹ்­ரோம் என்ற அந்த 55 வயது நோயா­ளிக்கு நேர்ந்த மர­ணம் தொடர்­பில் பல்­வேறு அபா­ய­க­ர­மான அம்­சங்­கள் அனை­வ­ரின் கவ­னத்­திற்­கும் வந்­துள்­ளன.

மார­டைப்பு வந்­ததை அடுத்து, திரு ரஸிப்­பைக் கவ­னித்­துக்­கொண்­ட­தில் சில குறை­பா­டு­கள் இருந்­த­தா­க­வும் அவற்­றில் ஒன்றே அவ­ரது இறப்­புக்­கும் இட்­டுச் சென்­ற­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

திரு ரஸிப்­புக்கு மார­டைப்பு ஏற்­பட்டு, வலி மோச­ம­டைய கூ டெக் புவாட் மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­றார். உடனே, அவ­ருக்­குச் சிகிச்சை தொடங்­கப்­பட்­டது. இருப்­பி­னும், திரு ரஸிப்­பின் இத­யச் செயல்­பாடு மோச­மா­கவே இருந்­த­தால் சிங்­கப்­பூர் தேசிய இதய நிலை­யத்­தின் உத­வியை மருத்­து­வ­மனை நாடி­யது. நிலை­யத்­தி­லி­ருந்து வந்த மருத்­து­வக் குழு, திரு ரஸிப்­புக்­குத் தேவை­யான சிகிச்­சையை அளித்­ததை அடுத்து நிலை சற்று சீராக இருந்­தது.

இருப்­பி­னும், சுவா­சிப்­ப­தற்­காக நோயா­ளிக்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட சாத­னத்­தில் இருந்த மின்­க­லம், சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­மனையை அடை­யும்­போது முழு­மை­யாக முடிந்­து­விட்­டது. அச்­சா­த­னம் இல்­லா­ம­லும் திரு ரஸி­மின் உடல்­நிலை சீரா­கவே இருந்­தது.

மருத்­து­வ­ம­னைக்கு வந்­த­தும் தூக்­குப் படுக்கை தள்­ளு­வண்­டி­யின் ஒரு பக்­கத்தை மருத்­துவ வண்டி ஓட்­டு­நர் தூக்­கிப் பிடித்­திருந்த நேரத்­தில், மறு முனை கீழே விழுந்­தது. மறு முனை­யில் திரு ரஸிப்­பின் தலை இருந்­தது.

ஜூன் 21ஆம் தேதி­யன்று திரு ரஸிப் உயி­ரி­ழந்­தார்.