செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
501036d2-dbef-465c-a651-d1018e2d5515
-

ஐநா போதைப்பொருள் ஆணைய உறுப்பினராக சிங்கப்பூர் நாட்டம்

உலக அளவில் போதைப்பொருள் தொடர்பான கொள்கைகளை உருவாக்கும் முக்கியமான அமைப்பாக ஐநா போதைப்பொருள் ஆணையம் திகழ்கிறது. அந்த ஆணையத்தில் உறுப்பினராக சிங்கப்பூர் விரும்புகிறது.

அந்த உறுப்பினர் பதவி 2024 முதல் 2027 வரை நீடிக்கும். ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் நடந்த ஐநா ஆணையத்தின் 64வது கூட்டத்தில் பேசியபோது மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ இவ்வாறு அறி வித்தார். அந்தக் கூட்டம் ஏப்ரல் 12 முதல் 16ஆம் தேதி வரை நடந்தது. அந்த மெய்நிகர் கூட்டத்தில் இரண்டாவது உள்துறை அமைச்சருமான திருவாட்டி டியோ தலைமை யில் சிங்கப்பூர் குழு கலந்துகொண்டது.

உள்துறை அமைச்சு, வெளியுறவு அமைச்சு, மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு, சிங்கப்பூர் சிறைச்சாலை சேவைத்துறை, சுகாதார அறிவியல் ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஐநா போதைப்பொருள் ஆணையத்தில் 53 நாடுகள் உறுப்பினர்க களாக உள்ளன. அந்த நாடுகள் ஆண்டு தோறும் கூடி உலக போதைப்பொருள் நிலவரத்தைப் பரிசீலனை செய்து பகுத்து ஆராய்கின்றன. அனைத்துலக அளவில் போதைப் பொருளைக் கையாளுவதற்கான உத்திகளை உருவாக்கு கின்றன. உலகம் முழுவதும் நிலவும் போதைப்பொருள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அந்த நாடுகள் பரிந்துரைக்கின்றன.

அந்த ஐநா ஆணையத்தின் கண்காணிப்பு நாடாக சிங்கப்பூர் பங்கெடுத்துக்கொண்டு வந்துள்ளது.

பகுப்பாய்வாளர்கள்: இவ்வாண்டு ஏற்றுமதிகள் மேலும் அதிகரிக்கும்

சிங்கப்பூரின் எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதிகள் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 12.1% கூடி இருக்கிறது.

கணினிச் சில்லுகள், மின்னணு சாராத பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள், நவீன இயந்திரங்கள், மருந்துகள் ஆகியவற்றுக்குத் தேவை அதிகமாக இருந்ததே அதிகரிப்புக்குக் காரணம் என்று என்டர்பிரைஸ் சிங்கப்பூர் நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதிகள் பிப்ரவரியில் 4.2% அதிகரித்தன. இதைவிட மார்ச்சில் நிலவரம் மேம்பட்டு உள்ளது. புளூம்பர்க் நிறுவனம் நடத்திய ஆய்வில் கலந்துகொண்ட பொருளியல் வல்லுநர்கள்கூட இத்தகைய ஏற்றுமதிகள் 2.6%தான் அதிகரிக்குமென முன்னுரைத்து இருந்தனர்.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நிலவரங்கள் எதிர்பார்க்கப்பட்டதைவிட சிறப்பாக இருப்பதை அடுத்து 2021 முழுவதற்கும் எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதி கள் முன்பு கணித்த அளவைவிட அதிகமாக இருக்கும் என்று இப்போது கூறுகிறார்கள்.