சமூகத்தில் புதிதாக நால்வருக்குத் தொற்று; நேற்று 39 பேருக்கு கொவிட்-19 பாதிப்பு

சமூகத்தில் புதிதாக நால்வருக்குத் தொற்று; நேற்று 39 பேருக்கு கொவிட்-19 பாதிப்பு

2 mins read
0e2353b6-d642-4eb4-9953-504532258040
-

சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்­ப­கல் வாக்­கில் புதி­தாக 39 பேருக்கு கொரோனா தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. சமூ­கத்­ தொற்­றுக்கு ஆளான நால்வரும் அவர்­களில் அடங்­கு­வர். புதி­தாகக் கிருமி தொற்­றி­யோரை­யும் சேர்த்து கொவிட்-19 பாதிப்பு ஏற்­பட்­ட­வர்­களின் மொத்த எண்­ணிக்கை 60,808 ஆக உயர்ந்து இருக்­கிறது.

நேற்று தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டோ­ரில் 35 பேர் வெளி­நாடு­களில் இருந்து இங்கு வந்­த­வர்­கள். தனி­மை­யில் இருக்க வேண்­டும் என்று அவர்­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. அவர்­களில் 10 சிங்­கப்­பூ­ரர்­கள் அல்­லது நிரந்­த­ர­வா­சி­களும் எட்டு வெளி­நாட்டு இல்­லப் பணிப்­பெண்­களும் அடங்­கு­வர்.

வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­விடு­தி­களில் நேற்று புதி­தாக யாருக்­கும் தொற்று இல்லை.

சமூ­கத்­தில் அண்­மை­யில் ஏற்­பட்­டுள்ள தொற்­று­களைக் கவ­னிக்­கும்­போது இங்கு கொவிட்-19 கிருமி துடைத்து ஒழிக்­கப்­ப­ட­வில்லை என்­பது தெரி­ய­வ­ரு­கிறது.

மக்­கள் கொஞ்­சம் அலட்­சி­ய­மாக இருந்­து­விட்­டால் புதிய தொற்று­களும் தொற்றுக் குழு­மங்­களும் ஏற்­படக்கூடிய வாய்ப்புள்ள தாக அமைச்சு எச்­ச­ரித்தது.

சிங்­கப்­பூ­ரில் வெள்­ளிக்­கி­ழ­மை­சமூ­கத் ­தொற்­று ஏற்பட்ட இரு­வரில் ஒரு­வர் சிங்­கப்­பூர் தேசிய பல்­கலைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த மூத்த ஆய்­வா­ளர் என்­றும் அமைச்சு கூறி­யது. இந்­தி­யா­வைச் சேர்ந்த அந்த 34 வயது ஆய்­வா­ளர், டிசம்­பர் 22 முதல் மார்ச் 21 வரை இந்­தி­யா­வில் இருந்­தார். பிறகு இங்கு வந்த அவர், தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டார்.

அந்த உத்­த­ரவை நிறை­வேற்­றிய பிறகு முதல் நாளாக ஏப்­ரல் 12ஆம் தேதி திங்­கட்­கி­ழமை அவர் வேலைக்­குப் போனார்.

சிங்­கப்­பூ­ருக்கு அந்த ஆய்­வா­ளர் வந்த விமா­னத்­தில் வந்த வேறு ஒரு­வ­ருக்கு தொற்று இருந்­த­தாக தெரி­ய­வந்­தது. கிருமி தொற்­றி­ய­வரு­டன் அந்த ஆய்­வா­ளர் விமா­னத்­தில் அணுக்­கத் தொடர்­பில் இருந்­தார் என்­ப­தும் தெரி­ய­வந்­தது.

மார்ச் 24 முதல் ஏப்­ரல் 11 வரை அந்த ஆய்­வா­ளர் தனி­மைப்­ப­டுத்­தப்­படும் இடம் ஒன்­றில் தனித்து வைக்­கப்­பட்­டார். மார்ச் 25, ஏப்­ரல் 3, ஏப்­ரல் 10 ஆகிய தேதி­களில் அவ­ருக்கு மூன்று பரி­சோ­த­னை­கள் நடத்­தப்­பட்­டன. அவ­ருக்குத் தொற்று இல்லை என்­ப­தையே அப் பரி­சோ­த­னை­கள் காட்­டின.

திங்­கட்­கி­ழமை மாலை­யில் உடல் வலி உள்­ளிட்ட பல பிரச்­சினை­க­ளைச் சந்­தித்­த­தால் அவர் வீட்­டி­லேயே இருந்­து­விட்­டார். புதன்­கி­ழமை அவ­ருக்குக் காய்ச்­சல் ஏற்­பட்­டது. பல­துறை மருந்­த­கத்­திற்­குச் சென்­றார்.

கொவிட்-19 பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது. தொற்று இருந்­தது அடுத்த நாள் தெரி­ய­வந்­தது. மருத்­துவ வாக­னத்­தில் அவர் தேசிய தொற்­று­நோய் நிலை­யத்­திற்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார்.

வெள்­ளிக்­கி­ழமை சமூ­கத்­தொற்­றுக்கு ஆளான மற்­றொ­ரு­வர் இந்­தோ­னீ­சி­யாவை சேர்ந்த 44 வயது ஆட­வர்.