பெண்கள் மேம்பாடு பற்றிய கலந்துரையாடல்

பெண்கள் மேம்பாடு பற்றிய கலந்துரையாடல்

3 mins read
af2c03c9-8743-4064-9a96-9e8d137ee85d
-

இந்து இளங்­கோ­வன்

பணி­யி­டத்­தில், பெண்­கள் ஆண்­

க­ளுக்கு நிக­ரா­ன­வர்­க­ளா­க­வும், சம­மான மதிப்­பு­மிக்க பங்­க­ளிப்­பு­க­ளைக் கொண்­ட­வர்­க­ளா­க­வும், ஊக்­க­ம­ளிக்­கும் தலை­வர்­க­ளா­க­வும் இருப்பதை நாம் அங்­கீ­க­ரிக்க வேண்­டும். இந்தக் கருத்தை

வலி­யு­றுத்­தி­யது நேற்று மாலை சிங்­கப்­பூர் கல்சா சங்க கட்­ட­டத்­தில் நடை­பெற்ற 'சிங்­கப்­பூர் மக­ளிர் மேம்­பாடு குறித்த உரை­யா­டல்­கள்' என்­னும் கலந்­து­ரை­யா­டல் நிகழ்வு.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு சிங்­கப்­பூர் பெண்­க­ளைக் கொண்­டாட 2021-ஆம் ஆண்டை அர்ப்­ப­ணித்­துள்­ளது.

"சிங்­கப்­பூர் மக­ளிர் மேம்­பாடு குறித்த உரை­யா­டல்­கள்" தொடர் கடந்த ஆண்டு செம்­டம்­பர் 20-ஆம் தேதி தொடங்­கப்­பட்­டது. இது பெண்­க­ளின் வளர்ச்­சி­ சார்ந்த கருத்­து­க­ளை­யும் பரிந்­து­ரை­க­ளை­யும் சேக­ரிக்­கும் தேசிய முயற்­சி­யின் ஒரு பகுதி.

உரை­யா­டல்­க­ளிலி­ருந்து சேக­ரிக்­கப்­படும் கருத்­து­களும் யோச­னை­களும் ஒரு வெள்ளை அறிக்­கை­யில் ஒருங்­கி­ணைக்­கப்­பட்டு இவ்­வாண்­டின் இறுதிக்­குள் நாடாளு­மன்­றத்­தில் சமர்ப்­பிக்­கப்­படும். சிங்­கப்­பூர் முழுக்க நூற்­றுக்­கும் மேற்­பட்ட உரை­யா­டல் அமர்­வு­கள் நடை­பெற்­ற­ வண்­ணம் உள்­ளன. இதில், ஒன்­பது மெய்­நி­கர் மற்­றும் நேருக்கு நேர் உரை­யா­டல்­களை பல அமைப்­பு­க­ளு­டன் இணைந்து நடத்­தி­யது 'ரீச்' (Reach). சிங்­கப்­பூர் இந்­திய மேம்­பாட்­டுச் சங்­கம் மற்­றும் சீக்­கிய இளை­யர் சங்­கத்­து­டன் இணைந்து நடத்­தப்­பட்ட நேற்­றைய உரை­யா­டல், குறிப்­பாக சிங்­கப்­பூர் இந்­திய சமூ­கத்­தில் பெண்­க­ளின் வளர்ச்­சி பற்­றிய கலந்­து­ரை­யா­ட­லாக அமைந்­தது. இதில் இந்­திய சமூ­கத்தை சேர்ந்து 50 பேர் கலந்­து­கொண்டு தங்­க­ளது எண்­ணங்­க­ளை­யும் கருத்­து­க­ளை­யும் வெளிப்­ப­டை­யாக பகிர்ந்­து­கொண்­ட­னர்.

அமைச்­சர் குமாரி இந்­தி­ராணி ராஜா­வும், அமைச்­சர் விக்­ரம் நாய­ரும் இந்­நி­கழ்­வில் சிறப்பு விருந்­தி­னர்­க­ளாக கலந்­து­கொண்டு பங்­கேற்­பா­ளர்­க­ளின் கருத்துகளை செவிமடுத்தார்.

தனது பாட்டி காலத்­தில் பெண்­கள் அதி­கம் கல்வி பெறவோ வேலை செய்­யவோ அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை என்­பதை நினைவு கூர்ந்த அமைச்­சர் திரு விக்­ரம் நாயர், இந்­நிலை மாறி சமூ­கம் பெண்­கள் சார்ந்த விஷ­யங்­களில் முன்­னே­றி­யி­ருந்­தா­லும், இன்­னும் நிறைய முன்­னேற்­றத்தை அடைய வேண்­டும் என்­னும் கருத்தை முன்­வைத்­தார்.

"சிங்­கப்­பூர் அர­சாங்­கம், பெண்­களை ஆத­ரிப்­ப­தற்­கும் அவர்­க­ளது வளர்ச்­சியை மேம்­ப­டுத்­து­வ­தற்­கும் உறு­தி­பூண்­டுள்­ளது. நமது தற்­போ­தைய சட்­டம் மற்­றும் கொள்­கை­க­ளின் அடிப்­ப­டை­கள் வலு­வாக இருந்­தா­லும் , ​​சிங்­கப்­பூர் பெண்­

க­ளின் கன­வு­க­ளை­யும் தேவை­

க­ளை­யும் புரிந்­து­கொள்­வ­தற்­கும், நமது சட்­டங்­களும் கொள்­கை­களும் காலப்­போக்­கில் பெண்­

க­ளின் தேவை­க­ளுக்­கேற்ப மறு­பரிசீலனை செய்­வ­தற்­கும் தயா­ராக இருக்­கி­றோம்.

ஆண்­கள், தமது வாழ்க்­கை­யில் உள்ள பெண்­க­ளின் வாழ்க்­கை­க்கு ஆத­ர­வ­ளிப்­ப­தில் முக்­கிய பங்கு வகிக்­க­வேண்­டும். உதா­ர­ணத்­திற்கு கண­வர்­களாக வீட்­டில் அதிக வீட்­டுப் பொறுப்­பு­களை ஏற்க முன்­வ­ர­வேண்­டும்.

"இது நமது குடும்­பங்­க­ளி­லும் நமது மகள்­க­ளின் வாழ்க்­கை­யி­லும் நல்ல தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும். மேலும் மனை­வி­யின் தனிப்­பட்ட மற்­றும் பணி­யிட கன­வு­க­ளை­அ­வர்­கள் எட்ட ஆத­ர­வாக இருக்­கும்." என்­றார் அமைச்­சர் விக்­ரம் நாயர்.

கலந்­து­ரை­யா­ட­லில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள நல்ல பரிந்­து­ரை­கள் மற்­றும் யோச­னை­கள் எது­வும் வீணா­காது என்று உறு­தி­ய­ளித்­தார் அமைச்­சர் குமாரி இந்­தி­ராணி.

"ஆண்­க­ளுக்­கும் பெண்­க­ளுக்­கும் இடை­யி­லான சமத்­து­வம் கடைப்­பி­டிக்­கப்­படும் இட­மாக சிங்­கப்­பூர் உரு­வெ­டுக்க வேண்­டும். பெண்­கள் தொடர்ந்து போரா­டும் நிலை மாற­வேண்­டும். இன்­னும் அந்­நி­லையை நாம் அடை­ய­வில்லை.

"ஆனால் அதை அடை­வ­தற்கு நாம் தொடர்ந்து பல முயற்­சி­களை எடுக்­க­வேண்­டும். இதற்­கான பொறுப்பு பெண்­க­ளுக்கு மட்­டும் அல்ல ஆண்­க­ளுக்­கும் உண்டு. ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் பரஸ்­பர மரி­யாதை, புரி­தல் மேம்­ப­ட­வேண்­டும். ஆண்­களும் பெண்­களும் ஒரே மாதி­ரி­யா­ன­வர்­கள் என்று நாம் நினைப்­பது தவறு.

"நாம் ஒரே மாதி­ரி­யாக இல்லை. ஆனால், நமக்கு வெவ்­வேறு பலங்­கள் உள்­ளன. அத­னால் மதிப்­பில் சமத்­து­வம், சம­மான வாய்ப்­பு­கள் கொடுக்­கப்­ப­ட­வேண்­டும். இதற்கு தனி நப­ரி­லி­ருந்து அர­சாங்­கம் வரை மாற்­றத்தை செயல்­ப­டுத்­த­வேண்­டும்," என்று அமைச்சர் இந்திராணி ராஜா தெரி­வித்­தார்.