வரவேற்கப்படும் 'புஃபே'; கூடுதல் செலவு குறித்து கவலை

வரவேற்கப்படும் 'புஃபே'; கூடுதல் செலவு குறித்து கவலை

2 mins read
2c4eef19-e5bc-4405-9320-be4659d51967
புஃபே முறை தொடர்பாக மேலும் பல மாற்றங்கள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம்: ராயல் பிளாசா ஓன் ஸ்காட்ஸ் -

இம்­மா­தம் 12ஆம் தேதி­யி­லி­ருந்து வர்த்தக ரீதி­யா­க­வும் கூட்­டங்­கள், மாநா­டு­கள், கண்­காட்­சி­கள் ஆகிய நிகழ்ச்­சி­க­ளி­லும் 'புஃபே' விருந்­துக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு வர்த்­த­கர்­க­ளி­ட­மி­ருந்து நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது.

ஆனால் கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க மிகக் கடு­மை­யான பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளைக் கடைப்­பி­டிக்க வேண்­டி­யி­ருப்­ப­தால் அத­னால் ஏற்­படும் கூடு­தல் செல­வு­கள் குறித்து வர்த்­த­கர்­கள் கவலை தெரி­வித்­துள்­ள­னர்.

பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை நடை­மு­றைப்­ப­டுத்த கூடு­தல் மனி­த­ வ­ள­மும் சாத­னங்­களும் தேவைப்

­ப­டு­கின்­றன.

சுய சேவைக்­குத் தொடர்ந்து அனு­மதி இல்லை. புஃபே விருந்­துக்கு வைக்­கப்­பட்­டுள்ள உண­வுப் பொருட்­கள் பிளாஸ்­டிக் உறை­யால் மூடப்­பட்­டி­ருக்க வேண்­டும். உண­வுக்­கான வரி­சை­யில் நிற்­ப­வர்­க­ளுக்கு முகக்­க­வ­சம் அணிந்­தி­ருக்­கும் ஊழி­யர்­கள் மட்­டுமே உண­வைப் பரி­மா­ற­லாம்.

வர்த்த ரீதி­யா­க­வும் கூட்­டங்­கள், மாநா­டு­கள், கண்­காட்­சி­கள் ஆகிய நிகழ்ச்­சி­க­ளின்­போ­தும் புஃபே முறை விருந்து வழங்­கப்­பட்­டால் சிங்­கப்­பூர் கேட்­ட­ரிங் நிபு­ணர்­கள் சங்­கத்­தின் வழி­காட்டி நெறி­மு­றை­கள் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­வதை உறுதி செய்ய பாது­காப்பு நிர்­வாகப் பிர­தி­நிதி அங்கு இருக்க வேண்­டும்.

"புஃபே உணவின் விலை­ நிறு­வ­னத்­துக்கு நிறு­வ­னம் வேறு­ப­டு­கிறது. சில இடங்­களில் $10 வெள்­ளிக்கு புஃபே வழங்­கப்­ப­டு­கிறது. கூடு­தல் செலவு ஏற்­ப­டு­வ­தால் இத்­த­கைய விலை கட்­டுப்­ப­டி­யா­காது. இத­னால் புஃபே விலையை உயர்த்­தி­யாக வேண்­டும்.

"கூடு­தல் ஊழி­யர்­களை நிய­மிக்க விலை உயர்த்­தப்­ப­டு­வ­தாக வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­குத் தெரி­விக்க வேண்­டும்," என்று சிங்­கப்­பூர் கேட்­ட­ரிங் நிபு­ணர்­கள் சங்­கத்­தின் தலை­வர் வின்­சென்ட் பாங் கூறி­னார்.

தற்­போது நடப்­பில் உள்ள வழி­காட்டி நெறி­மு­றை­கள் உணவு, பானத் துறைக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்­கும் மாநா­டு­கள் மற்­றும் கண்­காட்­சி­க­ளுக்­கும் மட்­டுமே பொருந்தும் என்­ப­தால் கூடு­தல் மாற்­றங்­கள் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றன. திரு­ம­ணங்­கள், இறு­திச் சடங்­கு­கள், சமூக நிகழ்­வு­கள் ஆகி­ய­வற்­றில் புஃபே முறைக்கு இன்­னும் அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை.

இத்­த­கைய நிகழ்­வு­களில் பென்ட்டோ பொட்­ட­லங்­களில் உணவு பரி­மா­றப்­படும் முறை தொட­ரும் என்று திரு பாங் குறிப்­பிட்­டார்.

ஒன்­று­கூ­டல்­கள், பெரிய அள­வி­லான நிகழ்­வு­கள் ஆகி­ய­வற்­றுக்­கான கட்­டுப்­பா­டு­கள் தொடர்ந்து நடப்­பில் இருப்­ப­தால் புஃபே முறை மீது பொது­மக்­க­ளுக்கு இன்­னும் முழு­மை­யான நம்­பிக்கை வர­வில்லை என்று அவர் தெரி­வித்­தார்.

"சமூக இடை­வெளி விதி­முறை நடை­மு­றை­யில் இருக்­கும் வரை முன்பு இருந்­ததுபோல புஃபே முறை இருக்­காது. கேட்­ட­ரிங் சேவையை மறு­சீ­ர­மைப்­பது குறித்து ஆராய வேண்­டும். சுய சேவை புஃபேயை இனி அவ்­வ­ள­வாக நம்­பி­யி­ருக்க முடி­யாது," என்று திரு பாங் தெரி­வித்­தார்.