பதின்ம வயது பெண் ஒருவரை பாலியல் செயலில் ஈடுபத்திய 26 வயது ஆடவருக்கு ஈராண்டு பத்து மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண் பதின்மூன்று வயதாக இருந்தபோதிலிருந்தே அவருடன் நிக் சோங் செங் சியோங் அந்தச் செயலில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலின் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் ஆபாச காணொளிகளைத் தம்வசம் வைத்தது தொடர்பிலான குற்றச்சாட்டுகளையும் பொறியாளராகப் பணியாற்றும் சோங் கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 12ஆம் தேதி) நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.