மூத்த எழுத்தாளர் சுதர்மனுக்கு ‘தமிழவேள்’ விருது

சிங்­கப்­பூ­ரின் மூத்த எழுத்­தா­ளர் 93 வய­தான திரு வை. சுதர்­ம­னுக்கு இவ்­வாண்டு தமி­ழ­வேள் விருது வழங்கி சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம் சிறப்­பித்­துள்­ளது.

கடந்த 70 ஆண்­டு­க­ளுக்கு மேலாக எழுத்­துப் பணி­யில் ஈடு­பட்­டுள்ள திரு சுதர்­மன் 15 நூல்­களை எழுதி வெளி­யிட்­டுள்­ளார்.

வர­லாற்று நினை­வு­கள் (ஆசிய விடு­த­லைப் போராட்­டத்­தில் ஒரு தமிழ்ப் புரட்­சி­யா­ளன்) என்ற நூலுக்கு 1991ஆம் ஆண்­டில் தமி­ழக அர­சின் பாராட்­டுச் சான்­றி­தழை திரு சுதர்­மன் பெற்­றது குறிப்­பி­டத்­தக்­கது.

இரண்­டாம் உல­கப் போரி­லும் சிங்­கப்­பூர் விடு­தலை பெற்ற காலத்­தி­லும் இளை­ய­ராக இருந்­தார் அவர். இந்­தியா, மலாயா, சிங்­கப்­பூர் ஆகிய மூன்று நாட்டு விடு­த­லைப் போராட்­டங்­களில் பங்கு கொண்­ட­தன் அடை­யா­ள­மா­கவே தன் பெய­ரு­டன் ‘விடு­த­லைக்­கவி’ எனும் அடை­யா­ளக் குறி­யீட்டை வைத்­துக் கொண்­ட­தாக திரு சுதர்­மன் கூறி­னார்.

தமிழ் முர­சு நிறு­வ­னர் தமி­ழ­வேள் கோ.சாரங்­க­பா­ணி­யின் நினை­வாக வழங்­கப்­படும்

‘தமி­ழ­வேள்’ விரு­தைப் பெற்ற சுதர்­மன், திரு சாரங்­க­பா­ணி­யு­ட­னான தமது நினை­வு­க­ளைப் பகிர்ந்­து­கொண்­டார்.

சிங்­கப்­பூ­ரின் மூத்த படைப்

­பா­ளர்­கள், தமி­ழுக்­குச் சேவை­யாற்­றி­ய­வர்­கள் ஆகி­யோ­ருக்கு வழங்­கப்­படும் இந்த விரு­தைப் பெறும் 26வது படைப்­பா­ளர் இவர்.

“இந்த இக்­கட்­டான கால­கட்­டத்­தி­லும் பல அமைப்­பு­கள் கைகோத்து இந்­நாட்­டில் தமிழை வாழ­வைக்க தமிழ்­மொழி விழா­வைக் கொண்­டா­டு­வது சிறப்­பா­னது,” என்­றார் திரு சுதர்­மன்.

தமிழ்­மொழி விழா­வின் அங்­க­மாக நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற முத்­த­மிழ் விழா, கொவிட்-19 நோய்ப் பர­வல் சூழ­லால் இரண்­டா­வது முறை­யாக மெய்­நி­கர் தளத்­தில் நடை­பெற்­றது.

விழா­வில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கப் பங்­கேற்ற நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு­வின் தலை­வ­ரு­மான திரு விக்­ரம் நாயர், “நம்­மு­டைய மொழி சிங்­கப்­பூ­ரில் வாழும் மொழி­யாக இருப்­ப­தற்கு எழுத்­தா­ளர்­கள் மிக­வும் முக்­கி­யம்,” என்­றார்.

வர­லாற்றுச் சம்­ப­வங்­க­ளைப் பற்றி திரு சுதர்­மன் எழு­தி­யுள்­ளவை அடுத்த தலை­மு­றை­யி­ன­ருக்கு நல்ல வாசிப்­பாக இருக்­கும் என்­றார் திரு விக்­ரம்.

கொவிட் காலத்­தில் போட்­டி­கள், நிகழ்ச்­சி­கள் என அனைத்­தை­யும் வித்­தி­யா­ச­மாகச் செய்ய வேண்­டிய நிலை இருந்­தா­லும் ஏற்­பாட்­டா­ளர்­கள் நல்ல முயற்சி எடுத்­துள்­ளார்­கள் என்­றார் திரு விக்­ரம்.

பாலர் பள்ளி முதல் பல்­க­லைக்

கழக நிலை­களில் பயி­லும் மாண­வர்­கள் உட்­பட பொது­மக்­களும் நிகழ்­வில் கலந்­து­கொண்­ட­னர். 704 மாண­வர்­களும் 25 பொது­மக்­களும் விழா­வில் நடத்­தப்­பட்ட போட்­டி­களில் ஈடு­பட்­ட­னர்.

மாறு­வே­டம், கதை சொல்­லு­தல், பேச்சு, மொழி­பெ­யர்ப்பு, சிறு­கதை ஆகிய பல வகை­யான போட்­டி­கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டன.

போட்­டி­களில் வெற்றி பெற்­ற­வர்­க­ளுக்கு நிகழ்ச்­சி­யில் விரு­து­கள் வழங்­கப்­பட்­டன. நாட்­டிய நட­னம், பாடல் போன்ற மற்ற பல கலை அம்­சங்­கள் நிகழ்ச்­சிக்கு மெரு­கூட்­டின.

தமி­ழ­கத்­தின் முன்­னாள் காவல்­துறை கண்­கா­ணிப்­பா­ள­ரான திரு அ.கலி­ய­மூர்த்தி நிகழ்ச்­சி­யில் சிறப்­புரை ஆற்­றி­னார்.

‘கரை­யற்ற கல்­வி­யும், வரை­யற்ற மொழி­யும்’ என்ற தலைப்­பில் பேசிய கலி­ய­மூர்த்தி புத்­த­கங்­கள் படிப்­பது மனித வாழ்வை உயர்த்­த­வல்­லது என்­றும் ஏழ்­மை­யி­லி­ருந்து விடுபட கல்வி உத­வும் என்­றும் வலி­யு­றுத்­தி­னார்.

“நிறைய பட்­டங்­க­ளைப் பெற்று தம் பெயரை அலங்­க­ரிப்­ப­தை­விட நல்ல புத்­த­கங்­களை எழுதி தன்­னு­டைய மனதை அலங்­க­ரிப்­ப­வர்­களே மேன்­மை­யா­ன­வர்­கள் என்று நான் எந்த மேடை­யி­லும் அடித்து சொல்­வேன். பட்­டப் படிப்பை முடித்து புத்­த­கங்­களை மூலை­யி­ல் எறிந்­து­விட்டு படிப்பு முடிந்­த­தாக முனைப்­பீர்­களே ஆனால் வாழ்க்­கை­யில் தோற்­றுப்­போ­வீர்­கள். தொடர்ந்து முன்­னேற முடி­யாது,” என்­றார் 35 ஆண்டு காலம் காவல் துறை­யில் பணி­யாற்­றிய திரு கலி­ய­மூர்த்தி.

முழு நிகழ்ச்­சி­யின் பதி­வு: https://youtu.be/Ig0kQDzg2ck

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!