மறுஆய்வு செய்யப்படும் 'பிஎன்பிஎல்' கட்டண முறை

மறுஆய்வு செய்யப்படும் 'பிஎன்பிஎல்' கட்டண முறை

2 mins read
7eafa2db-aa34-4c9c-ba1f-9d633079ce75
-

'இப்­போது வாங்கி, பிறகு பணம் செலுத்­துக' எனப்­படும் 'பிஎன்­பி­எல்' திட்­டம் பய­னீட்­டா­ளர்­கள் அதி­கம் செல­வி­டு­வ­தற்­குக் கார­ண­மாக அமை­வ­தால் அந்­தத் திட்­டத்­தைக் கட்­டுப்­ப­டுத்­து­வது தேவையா என்­பது குறித்த மறு ஆய்வு மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது.

கடந்த சில ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூ­ரி­லும் மற்ற நாடு­க­ளி­லும் இணை­யம் வழி­யா­கப் பொருள்­கள் வாங்­கு­வது பிர­ப­ல­ம­டைந்து வரு­வ­தால் அது இளம் வாடிக்­கை­யா­ளர்­களை ஈர்த்து வரு­கிறது.

சிங்­கப்­பூர் வாடிக்­கை­யா­ளர்­

க­ளுக்கு அதன் தொடர்­பி­லான பயன்­களும் அபா­யங்­களும் அதி­கம் என சிங்­கப்­பூர் நாணய ஆணையத்­தின் பேச்­சா­ளர் குறிப்­பிட்­டார்.

அத­னால், அத்­த­கைய திட்­டங்­க­ளுக்கு ஏற்ற விதி­முறை அணு­கு­மு­றை­க­ளைப் பற்றி மறு ஆய்வு மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது.

இத்­திட்­டம் குறித்து வர்த்­த­கங்­க­ளி­டம் தர­வு­க­ளைப் பெற­வும் ஆணை­யம் முயற்சி எடுத்­துள்­ளது.

வர்த்­த­கர்­க­ளுக்­கும் பய­னீட்­டா­ளர்­க­ளுக்­கும் புதிய கட்­டண முறை­கள் வழங்­கும் பலன்­களை மதிப்­பி­டு­வ­து­டன் அவற்­றால் பய­னீட்­டா­ளர்­கள் அள­வுக்கு அதி­க­மா­கக் கடன் வாங்கி அவற்­றைத் திருப்­பிச் செலுத்த சிர­மப்­படும் நிலை ஏற்­ப­டக்­கூ­டாது என்­ப­தும் மறு ஆய்­வின்­போது கவ­னத்­தில் கொள்­ளப்­படும். விதி­முறை சட்­டப்­பணி தேவைப்­பட்­டால், பய­னீட்­டா­ளர்­க­ளின் கடன் அபா­யங்­க­ளைக் குறைக்­கும் விதத்­தில் அனைத்து 'பிஎன்­பி­எல்' திட்­டங்­க­ளுக்­கும் செயல்­ப­டுத்­தும் விதத்­தில் அத்­த­கைய விதிமுறை­களை சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் செயல்­ப­டுத்­தும் என்­றும் அதன் பேச்­சா­ளர் குறிப்­பிட்­டார்.

'பிஎன்­பி­எல்' திட்­டத்­தின்­கீழ் பொருள்­களை வாங்­க­லாமா என்று முடி­வெ­டுக்க கீழ்க்­கண்ட ஆலோ­ச­னை­க­ளை­யும் சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் வழங்­கி­யுள்­ளது.

1. 'பிஎன்­பி­எல்' திட்­டம் இருக்­கிறது என்­ப­தற்­காக அத்­தி­யா­வ­சி­ய­மற்ற பொருள்­களை சக்­திக்கு மீறி செல­வ­ழித்து வாங்­கக்­கூ­டாது. அவ்­வாறு செய்­தால் அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­க­ளுக்கு போதிய அள­வுக்கு செல­வ­ழிக்க இய­லா­மல் போகும்.

இத்­த­கைய திட்­டங்­க­ளைப் பயன்­ப­டுத்தி பொருள்­கள் வாங்­கும்­போது உரிய காலத்­துக்­குள் திருப்­பிச் செலுத்­த­மு­டி­யா­மல் போனால் கூடு­தல் கட்­ட­ணங்­க­ளைச் செலுத்த வேண்­டி­யி­ருக்­கும் என்­பதை நினை­வில் கொள்ள வேண்­டும்.

2. கட்­ட­ணத்­தைப் பிறகு செலுத்­த­லாம் என்­பது பொருள்­க­ளைக் குறைந்த விலைக்கு வாங்­கு­வது என்று பொரு­ளா­காது.

'பிஎன்­பி­எல்' திட்­டத்­தின் மூலம் பொருள்­கள் வாங்­கி­ய­வர்­களில் 30 விழுக்­காட்­டி­னர் நிதிப் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கி­ய­தா­கத் தெரி­வித்­துள்­ள­னர்.

3. விற்­ப­னைச் சலுகை அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தால், உட­ன­டி­யா­கப் பொருள்­கள் வாங்­க­வேண்­டும் என்று அவ­ச­ரப்­பட வேண்­டாம். கிட்­டத்­தட்ட எல்லா சம­யங்­க­ளி­லும் ஏதா­வது விற்­ப­னைச் சலு­கை­கள் இருக்­கவே செய்­யும். பல இடங்­களில் கிடைக்­கக்­கூ­டிய பொருள்­க­ளாக இருந்­தால், இணை­யத்­தில் தேடி, விலை குறை­வான இடத்­தில் வாங்­க­லாம்.

4. அள­வுக்கு அதி­க­மா­கப் பொருள்­கள் வாங்க வேண்­டாம். சில வேளை­களில், வாங்­கும் பொருள்­கள் தர­மா­ன­வை­யாக இல்­லா­ம­லும் இருக்­க­லாம். கூடு­த­லா­கப் பொருள்­கள் வாங்­கி­னால் அதிக தள்­ளு­படி என்­ப­தைப் பார்த்து ஏமாற வேண்­டாம். இறுதியில் கூடுதலாக செலவு செய்ய நேரிடலாம்.