'பிள்ளையின் விருப்பப்படி பாதுகாப்புத் திட்டம்'

'பிள்ளையின் விருப்பப்படி பாதுகாப்புத் திட்டம்'

1 mins read
8a6b6b34-b6ae-49a3-bf03-cdb5accd8e24
-

குடும்­பத்­துக்­குள் இருக்­கும் நபரே சிறு­பிள்­ளை­களைப் பாலி­யல் துன்­பு­றுத்­த­லுக்கு ஆளாக்­கும்­போது, அந்­தப் பிள்ளை பாது­காப்­பாக இருப்­பதை குழந்­தைப் பாது­காப்­புச் சேவை (சிபி­எஸ்) உறுதி செய்­கிறது.

அந்­தப் பிள்­ளைக்கு பாலி­யல் தொல்லை கொடுக்­கும் நப­ரு­டன் பிள்­ளை­யைத் தனி­யாக விடா­மல் பார்த்­துக்­கொள்­ளும் ஒரு­வ­ரின் பாது­காப்­பில் பிள்ளை விடப்­படும் என்று சிபி­எஸ் விசா­ர­ணைக் குழு­வின் மேலா­ளர் நூருல் நடியா முகம்­மது நூர், 29 கூறி­னார்.

பிள்­ளை­யின் விருப்­பமும் அறிந்து முடிவு செய்­யப்­படும் என்­றார் அவர். பின்­னர், பிள்­ளை­க­ளின் வாழ்க்கை தொடர்­பில் குடும்ப உறுப்­பி­னர்­கள் பின்­பற்ற வேண்­டிய பாது­காப்­புத் திட்­டம் ஒன்று வரை­ய­றுக்­கப்­படும்.

பிள்­ளைக்குத் தொல்லை கொடுத்­த­வ­ருக்கு மன­நல சிகிச்சை அளிக்­கப்­பட்டு, பிள்­ளை­க­ளுக்கு இனி­மேல் பிரச்­சினை இல்லை என்­பதை உறு­திப்­ப­டுத்­திய பிறகே பாது­காப்­புத் திட்­டம் மீட்­டுக்­கொள்­ளப்­படும் என்­றார் அவர்.