பதின்மூன்று வயது சிறுமியிடம் பாலியல் சேவைக்கு பணம் கொடுத்து, அதை வாடிக்கையாக்கிய 24 வயதான நிக் சோங் செங் சியோங்குக்கு ஈராண்டுகள் மற்றும் 10 மாதங்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பதினான்கு வயதுக்கு உட்பட்ட பெண்ணிடம் பாலியல் உறவுகொண்டதாக 3 குற்றச்சாட்டு
களையும் ஆபாச புகைப்படங்களை வைத்திருந்ததாக ஒரு குற்றச்சாட்டையும் சோங் இம்மாதம் 12ஆம் தேதி ஒப்புக்கொண்டார். ஆனால், வயது குறைந்த பெண்ணுடன் பாலியல் உறவுகொண்டதாக 7 குற்றச்சாட்டுகள் தீர்ப்பின்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.
இந்தக் குற்றங்களைப் புரிந்தபோது, பொறியியல் நிறுவனம் ஒன்றில் திட்டப்பணி குழுத்தலைவராக சோங் பணிபுரிந்து வந்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ChatIW எனும் உரையாடல் செயலி வழியாக அந்தப் பெண்ணுடன் சோங்குக்கு நட்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் வாட்சப் செயலி வழியாக உரையாடலைத் தொடர்ந்தனர்.
ஆபாச புகைப்படங்கள், காணொளிகளை அனுப்புமாறு சோங் கேட்டதற்கு அந்தப் பெண்ணும் இணங்கி அனுப்பினார். அதன் பிறகு, அந்தப் பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டு, அதற்குப் பணம் கொடுக்க சோங் விரும்பினார். அந்தப் பெண்ணும் சம்மதித்தார்.
ஆனால், அந்தச் சமயத்தில் தனக்கு 13 வயது என்பதை அந்தப் பெண் சோங்கிடம் தெரிவித்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி வரை கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் பாலியல் உறவு கொண்டதாகக் கூறப்பட்டது. பெரும்பாலும் மாற்றுத் திறனாளி
களுக்கான கழிவறைகள் அல்லது சோங் பதிவு செய்த ஹோட்டல்களில் இவர்களது சந்திப்பு நிகழ்ந்தன. அந்தச் சமயங்களில் காணொளிகளைப் பதிவு செய்த சோங், அவற்றை அந்தப் பெண்ணுக்கும் அனுப்பினார். அத்தகைய முதல் சந்திப்புக்குப் பிறகான சந்திப்புகளுக்கு $30 முதல் $50 வரை சோங் அந்தப் பெண்ணுக்கு வழங்கினார்.
கணினி விளையாட்டுகளை வாங்க அந்தப் பெண்ணுக்கு பணம் தேவைப்பட்டது சோங்குக்கு தெரிந் திருந்தது. பாலியல் சேவைக்கு பணம் வழங்கி அந்தப் பெண்ணை சோங் பழக்கியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் போலிசார் நடத்திய விசாரணையில் அந்தப் பெண் பலருடன் பாலியல் உறவு கொண்டதாகக் குறிப்பிட்டதை அடுத்து, இந்தச் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
14 வயதுக்குட்பட்ட சிறுமியுடன் பாலியல் உறவுகொண்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 20 ஆண்டுகள் வரை சிறை, அபராதம், பிரம்படிகள் விதிக்கப்பட்டிருக்கலாம். ஆபாச புகைப்படங்கள் வைத்திருந்ததற்காக ஆறு மாத சிறை, $200,000 வரை அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம்.

